Accaddemy

பள்ளிவீதியின் பெயர்க்கல்லை ஒரு குழு பலவந்தமாக அகற்ற வரப்போவதாக பரவிய செய்தியை அடுத்து விஷேட பாதுகாப்பு நடவடிக்கை...


கண்டி நகர் லைன் பள்ளிவாயல் மினாரத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த கோரி சிங்கலே அமைப்பு ஆர்பட்டம் செய்த நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டமை நாம் அறிந்ததே..

கண்டி பள்ளிவீதி என்ற வீதியின் பெயரை குமார வீதி மற்றம் செய்யக்கோரி சில வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை முனவைக்கப்பட்டு வந்த  நிலையில் இன்றைய தினம் குறித்த பாதையின் பெயர் கல்லை ஒரு சிலர் பலவந்தமாக அகற்றப்போவதாக தகவல்கள் பரவியுள்ளன.

அதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த பாதையின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதுடன் சட்டவிரோதமாக பெயர்கல்லை அகற்ற எவரும் வந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பின் நிற்க போவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
பள்ளிவீதியின் பெயர்க்கல்லை ஒரு குழு பலவந்தமாக அகற்ற வரப்போவதாக பரவிய செய்தியை அடுத்து விஷேட பாதுகாப்பு நடவடிக்கை... பள்ளிவீதியின் பெயர்க்கல்லை  ஒரு குழு பலவந்தமாக அகற்ற  வரப்போவதாக பரவிய செய்தியை அடுத்து விஷேட பாதுகாப்பு நடவடிக்கை... Reviewed by Madawala News on 7/17/2016 01:58:00 PM Rating: 5