Free Space

சவுதியில் இலங்கை மனைவியை கொன்ற அமெரிக்கருக்கு தண்டனை வழங்கபட்டது.



அமெரிக்காவை சேர்ந்த பிரஜை ஒருவர், இலங்கையைச் சேர்ந்த அவரது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியை கொன்ற அமெரிக்க பிரஜைக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி சவூதி அரேபிய நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் அங்கு எண்ணெய் தொட்டியில் உள்ள குழாய் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த குறித்த நபர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலத்தை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குறித்த பெண் இறந்து 8 மாதங்கள் ஆகியுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணின் சடலத்தை அந்த பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களே மீட்டுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கொலைக்கு காரணமானவருக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.arabnews.com/node/959306/saudi-arabia
சவுதியில் இலங்கை மனைவியை கொன்ற அமெரிக்கருக்கு தண்டனை வழங்கபட்டது. சவுதியில் இலங்கை மனைவியை கொன்ற அமெரிக்கருக்கு தண்டனை வழங்கபட்டது. Reviewed by Madawala News on 7/25/2016 11:52:00 AM Rating: 5