Oceas

கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்- ஹாபிழ் (குரானை மனணம் செய்தவர்) களுக்கான மாநாடு -பாசிக்குடாவில்



கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்   அஹமட் அவர்களின் சிந்தனையில் உதித்த கிழக்கில் இருக்கும் அல்-ஹாபிழ் (குரானை மனணம் செய்தவர்) களை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவப் படுத்துவதுடன் அவர்களுக்கான தகமைக்கேற்ப தொழில் வாய்ப்புக்கள் மற்றும் இதர சலுகைகளையும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

அந்தவகையில் இம்மாதம் இரண்டாம் வாரம் அவர்களுக்கான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஏராளமான ஹாபிழ்கள் புனித ரமழானுக்காக வெளிநாடுகளுக்கும், வெளிஊர்களிலும் மார்க்கக் கடமைகளிலும் ஈடுபட்டிருப்பதால் தாமதித்து நடாத்துமாறு முதலமைச்சரை கேட்டுக்கொண்டமையால் அடுத்து வரும் மாதத்தில் மிகவிமர்சியாக பாசிக்குடா ஹோட்டலில் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஆகவே கிழக்கில் உள்ள அனைத்து அல்-ஹாபிழ்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கண்ணியமான அழைப்பினை விடுக்கின்றார். எனவே  அனைத்து ஹாபிழ்களும் உங்கள் விபரங்களை அனுப்பி இம்மாநாட்டில் கலந்து கொண்டு பிரயோசனம் அடைவதுடன் மற்றவர்களுக்கும் பிரயோசனம் கிடைக்க வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

எனவே அல்-ஹாபிழ்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் உங்கள் ஊர்களிலேயே விநியோகிக்கப் படுவதால் அதனைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது
பொத்துவில் தொடக்கம் புல்மொட்டை வரையான ஊர்களைச் சேர்ந்த ஹாபிழ்கள் உங்கள் வருகையை உறுதி செய்ய குறிப்பிடும் இம்மின்னஞ்சலுக்கு  உங்கள் விபரத்தினை அனுப்பிவைக்கவும் program.eastcm@gmail.com உங்களுக்கான அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

அல்-ஹாபிழ்களுக்கான விண்ணப்பப் படிவம்

1.    முழுப்பெயர்
 
 
2.    விலாசம்
 
 
3.    தே.அ.அ இல
 
 
4.    கல்வித்தகமை
 
 
5.    பிரதேச செயலாளர் பிரிவுஃ
மாவட்டம்
 
6.    மத்ரஸாவும் பட்டம்பெற்ற காலமும்
 
 
7.    தொழில்
 
 
8.    தொழில் புரியும் முகவரி
 
 
9.    மேலதிக தகமைகள்
 
 
10.  கிறாஅத் போட்டிகளில் பங்குபற்றியிருந்தால் விபரம்
 
 
11.  கையொப்பம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்- ஹாபிழ் (குரானை மனணம் செய்தவர்) களுக்கான மாநாடு -பாசிக்குடாவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்- ஹாபிழ் (குரானை மனணம் செய்தவர்) களுக்கான மாநாடு -பாசிக்குடாவில் Reviewed by Madawala News on 7/07/2016 09:16:00 PM Rating: 5