முதலாம் திகதி பாதயாத்திரை இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதில் சிக்கல்...


கூட்டு எதிர்கட்சியின் 11 முக்கிய உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக புறக்கோட்டையில் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிமன்றம் இதன் விசாரணைகளுக்காகவே குறித்த 11 பேரையும் நீதிமன்றில் முதலாம் திகதி ஆஜராகும் படி குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ்குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஸ , மஹிந்தாநந்த அளுத்கமகே , ஜோன்ஸ்டன் பெர்னானடோ, பிரசன்ன ரணதுங்க,ரோஹித அபேகுணவர்தன , ஸ்ரீயானி விஜயவிக்ரம , ரஞ்சித் சொய்சா ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரையின் இறுதி நிகழ்வு முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த 11 உறுப்பினர்களுக்கும் அதில்பங்கேற்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் திகதி பாதயாத்திரை இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதில் சிக்கல்... முதலாம் திகதி பாதயாத்திரை இறுதி  நிகழ்வில் கலந்துகொள்வதில் சிக்கல்... Reviewed by Madawala News on 7/30/2016 03:30:00 PM Rating: 5