காத்தான்குடி மாணவியை காணவில்லை. தந்தையின் வேண்டுகோள்.

மட்டக்களப்பு – காத்தான்குடி நகரில், நேற்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்குச் சென்ற 16 வயது நிரம்பிய மாணவியொருவர், இதுவரை வீடு திரும்பவில்லையென காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
.

காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும், ‪நஜிமுதீன் பாத்திமா தஸ்னிகா (வயது – 16) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
.

வழமைபோல் நேற்று காலை பாடசாலைக்குச் சென்றபோதும், குறித்த மாணவி பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாணவியை தேடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
.

அத்தோடு, மாணவி பற்றிய தகவல் அறிந்தோர், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தை நஜிமுதீன் – 0775161797

.
காத்தான்குடி பொலிஸ் நிலையம் – 0652246595, .

காத்தான்குடி மாணவியை காணவில்லை. தந்தையின் வேண்டுகோள். காத்தான்குடி மாணவியை காணவில்லை. தந்தையின் வேண்டுகோள். Reviewed by Madawala News on 7/19/2016 04:43:00 PM Rating: 5