Ad Space Available here

ஜனாதிபதி மைத்ரி - மஹிந்த இன்று சந்திப்பு ...

கூட்டு எதிர்க் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த சந்திப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்வார் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானவர்களுக்கு இந்த அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் காலத்தை இன்னும் ஐந்து வருடங்களாக நீடிக்க கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது.இது தொடர்பிலும், எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள நடைபவனி பற்றியும் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி மைத்ரி - மஹிந்த இன்று சந்திப்பு ... ஜனாதிபதி மைத்ரி - மஹிந்த இன்று சந்திப்பு  ... Reviewed by Madawala News on 7/25/2016 02:51:00 PM Rating: 5