Oceas

பாகிஸ்தான் ஜெயித்தால் நிர்வாண நடனம் ஆடதயார் என கூறி சர்ர்சையை கிளப்பிய நடிகை கொல்லப்பட்டார் ! சகோதரரே கொலையாளி



 
பாகிஸ்தானில் சர்ச்சைக்கு பெயர்போன  பிரபல நடிகை குவாண்டீல் பலோச் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டுவண்டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது இந்தியாவை தோற்கடித்தால் முழு தேசத்திற்காகவும் (பாகிஸ்தான்) நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குவாண்டீல் பலோச் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஷாகிக் அப்ரிடியை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் வீடியோ வெளியிட்டார். 

குவாண்டீல் பலோச் ’பேஸ்புக்’கில் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அவரது சகோதரருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இதுபோன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடாதே என்று அவரது சகோதரர் பலமுறை எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குவாண்டீல் அதனை கணக்கில் கொள்ளவில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் பாதுகாப்பு அளிக்குமாறும் போலிசிடம் குவாண்டீல் கேட்டுக் கொண்ட நிலையில் 

தொடர்ந்து குவாண்டீல் பலூச் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரது சகோதரரே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கூறியுள்ள போலீஸ் அதிகாரி சுல்தான் அசாம் ..

'குவாண்டீல் பலூச் கொலை செய்யப்பட்டு உள்ளார் அவருடைய சகோதரரால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். 

முன்னதாக குவாண்டீல் பலூச் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மீடியாக்களில் செய்தி வெளியானது. ஆனால் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில் குவாண்டீல் பலூச் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அவரை கொலை செய்த சகோதரர் வாசீம் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். இரவு வீட்டிற்கு சென்ற வாசீம் தூங்கிக் கொண்டு இருந்த குவாண்டீல் பலூச்சை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் பாகிஸ்தான் போலீஸ் உடனடியாக குற்றவாளியை கைது செய்வோம் என்று கூறிஉள்ளது. குற்றவாளி வாசீம்மை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். குவாண்டீல் பலோச் 'கொலை'யால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
பாகிஸ்தான் ஜெயித்தால் நிர்வாண நடனம் ஆடதயார் என கூறி சர்ர்சையை கிளப்பிய நடிகை கொல்லப்பட்டார் ! சகோதரரே கொலையாளி பாகிஸ்தான் ஜெயித்தால் நிர்வாண நடனம் ஆடதயார் என கூறி சர்ர்சையை கிளப்பிய நடிகை கொல்லப்பட்டார் ! சகோதரரே கொலையாளி Reviewed by Madawala News on 7/16/2016 02:53:00 PM Rating: 5