Oceas

மு.காவின் வீட்டுக்கு வீடு மரம் நாளை கல்முனையில் அங்குரார்ப்பணம்


(ஹாசிப் யாஸீன்அகமட் எஸ்.முகைதீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்நோக்கியபயணத்தை தொடர்வதற்கும்எதிர்காலசந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தைஎடுத்துச் செல்லுமுகமாக 'வீட்டுக்கு வீடு மரம்வேலைத்திட்டம் கட்சியின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில்தேசிய ரீதியில் நாளை திங்கட்கிழமை 01ம் திகதிஅங்குரார்ப்பண செய்து வைக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக கல்முனைத் தொகுதிக்கான'வீட்டுக்கு வீடு மரம்அங்குரார்ப்பண நிகழ்வுஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைசாய்ந்தமருதுமருதமுனைநற்பிட்டிமுனை ஆகியபிரதேச மத்திய குழுக்களின் ஏற்பாட்டில் கட்சியின்பிரதித் தலைவரும்விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் நாளை திங்கட்கிழமை (01.08.2016) இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு மருதமுனையில் காலை 8.30 மணிக்கும்நற்பிட்டிமுனையில் காலை 10.00 மணிக்கும்மாளிகைக்காட்டில் காலை 11.00 மணிக்கும்சாய்ந்தமருதில் மாலை 4.00 மணிக்கும்கல்முனையில் மாலை 5.00 மணிக்கும் இடம்பெறஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இதன்போது மக்களுக்கு பயன் தரக்கூடிய மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மு.காவின் வீட்டுக்கு வீடு மரம் நாளை கல்முனையில் அங்குரார்ப்பணம் மு.காவின் வீட்டுக்கு வீடு மரம் நாளை கல்முனையில் அங்குரார்ப்பணம் Reviewed by Madawala News on 7/31/2016 07:28:00 PM Rating: 5