Wednesday, July 20, 2016

காஷ்மீர் கொடுரம் ! நூற்றுக்கும் அதிகமானவர்களின் பார்வைகளை பறித்த இந்திய ராணுவம் ..

Published by Madawala News on Wednesday, July 20, 2016  | 


ந்திய அரசின் உத்தரவோடு காஷ்மீறில் சமீபகாலமாக இராணுவம் நடத்திய தாக்குதலில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் இந்திய இராணுவம் பெல்லட் கன் (pellet) எனப்படும் ஏர் துப்பாக்கியின் மூலம்  சிறு குண்டுகளை பயன்படுத்தி காஷ்மீர் மக்களை ஒடுக்கியுள்ளது.

இதனால் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் “இந்த 4 நாட்களில் மட்டும் நாங்கள் 100 கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம்” என்று கூறுகின்றனர். 


மேலும் சிகிச்சை மேற்கொண்ட அனைவரும் தங்களின் கண் பார்வை இழக்க நேரிடும் என்ற தகவலை தலைமை மருத்துவர் யாருக்கும் தெரியாமலும், நான் தான் தெரிவித்தது என்று வெளியிட கூடாது என்ற நிபந்தனையின் கீழும் எங்களிடம் கூறினார்.


இத்தகைய பெல்லட் குண்டு தாக்குதல் முதன் முதலில் வாத்து வேட்டை (Duck-Hunting) ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருமுறை சுடும் போது அதிவேகத்தில் சுமார் 600  சிறு குண்டுகள் வெளிப்படும். இதனால் எதிரில் உள்ளவர்கள் மீது சரமாரியாக தாக்கும் இச்சிறு குண்டுகள் ஆர்ப்பாட்டக்காரர்களை செயலிழக்க வைத்துவிடும். இந்த பெல்லட் தாக்குதல் அடிக்கடி இந்திய இராணுவத்தால் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் போலீசார் கூறுகையில் எந்தவித உயிரிழப்புகள் ஏற்படாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இது பயன்படுவதாக கூறுகின்றனர். அதை மறுக்கும் போராட்டக்காரர்கள் இக்குண்டுகள் பொதுமக்களின் கண்களை இழக்க செய்கின்றன, அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். தற்போது இக்குண்டினால் 4 வயது சிறுமி உள்பட பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்கடி மருத்துவமனையை இரகசிய பிரிவு போலிசார் சுற்றி வருவதால் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளைஞர்களின் விவரங்களை பெற்றுக் கொண்டு பின்னர் பதிலடியாக தாக்கக்கூடும் என்று இந்த மருத்துமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் உண்மை தகவல்களை குறிப்பிடாமல் எண்களை கொண்டு நோயாளிகளை அடையாளம் காண்கின்றனர்.

புட்கம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன்,” நான் என்னுடைய அம்மாவிற்கு மருந்து வாங்க வெளியில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று இராணுவ வீரர்கள் என்னை சூழ்ந்துக்கொண்டு பெல்லட் குண்டுகளால் சுட்டனர். இத்தனைக்கும் அப்போது கலவரம் எதுவும் நடைபெறவில்லை”, என்கிறார்.

கண்டேர்பல் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது தமன்னா அஷ்ரஃப், பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது இரைச்சலுடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது என்று அவளின் தாய் ஷமிமா கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அவளுடைய இடது கண்ணில் சிறு இரும்பு குண்டை பார்த்ததும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலுகையில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டோம். அப்போது இவர்கள் என்னுடைய குழந்தையின் வாழ்க்கையோடு ஏன் விளையாடுகிறார்கள் என்று நான் அழ தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக அன்று எங்களால் மருத்துவமனைக்கு செல்ல முடிந்தது ”.

- Kannaiyan Ramadoss - 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top