கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்


ஏ. எல். எம். அஸ்லம்
கிழக்கு மாகாண கல்வியமைச்சில் மேலதிக ஒழுக்காற்று விசாரணை ஒன்றுக்காக இணைப்புச் செய்யப்பட்டிருந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியொருவருக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிளை பெற்றுக் கொடுப்பதற்காக நீதிமன்றுக்கு உண்மையை  மறைத்த மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழச் செயலாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஜனாப். ஏ.எல்.முஹம்மட் முக்தார் முன்வைத்துள்ளார். 

அவரது கடிதத்தில் தெரிவிக்கபட்டிருப்பதாவது..

அம்பாறை மாவட்டமொன்றில் உள்ள கல்வி வலயத்தில் இடம்பெற்றிருந்த முறைகேடு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2014ம் ஆண்டு குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு மேலதிக ஒழுக்காற்று விசாரணைக்காக கிழக்குமாகாண கல்வியமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டிருந்தார். 

இதணையடுத்து இவ்வதிகாரி அண்மையில் தம்மை கிழக்குமாகாண கல்வியமைச்சு தனது தரத்தினைவிட குறைந்த தரத்திலான பதவியொன்றில் இணைப்புச் செய்துள்ளதாகவும் தனக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்குமாறும்கோரி தொடர்புடைய அதிகாரிகள் மீது கல்முனை மேற்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்றை தொட்ந்திருந்தார்.

இவ்வழக்கின்போது குறித்த அதிகாரி என்ன காரணத்திற்காக அவர் வகித்த வலயக் கல்விப்பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கிழக்குமாகண கல்வியமைச்சுக்கு இணைக்கப்பட்டார் என்ற உண்மையை நீதிமன்றுக்கு கிக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் தெரிவிக்காமல் விசாரணை அறிக்கையை மறைத்து குறித்த உத்தியோகத்தருக்குச் சார்பாக ஒரு இணக்கப்பாட்டிணை ஏற்படுத்தி அவ்வதிகாரியை திருமலை மாவட்டத்திலுள்ள வலயமொன்று வலயக் கல்விப் பணிப்பாராக நியமித்துள்ளனர்.
இதேவேளை இவரைப்போன்ற இன்னுமொரு கல்வியதிகாரிக்கு பாதகமான முறையில் ஒரு அறிக்கையை முன்வைத்து தமது பிழைகளை மூடி மறைத்து அவரின் சட்டப்படியான உரிமைகளை பெற்றுக் கொள்ள தடையான இருந்துள்ளனர்.

எனவே இத்தகைய பாரபட்சமான முரன்பாட்டை ஏற்படுத்தியுள்ள கிழக்குமாகாண அதிகாரிகளின் நடத்தைகள் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேற்படி சங்கம் கோரியுள்ளது. மேலும் மீளவும் வலயக் கல்விப்பணிப்பாராக பதவி வழங்கப்பட்ட இக்கல்விப் பணிப்பாளர் அண்மையில் பெண் ஆசிரியை ஒருவருடனான பாலியல் சர்ச்சையில் சிக்கியமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் Reviewed by Madawala News on 7/20/2016 07:25:00 AM Rating: 5