Kidny

Kidny

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதீ சாம்பல் தீவு சந்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்க ஏற்பாடு



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதீ சாம்பல் தீவு சந்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைப்பதற்காண ஏற்பாடு இடம் பெற்று வருவதினால்

இந்த விடயத்தை மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக மூதூர் இந்து குருமார் சங்க தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  கடந்த காலங்களில் இனப்பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மததலங்கள் வழிபாட்டு சின்னங்களை இன்னுமோர் இனத்தவர் அல்லது மதத்தவர் செறிவாக வாழும் பகுதியில் அதுவும் தனியாருக்கு சொந்தமான காணியில் வைத்து வந்ததால் இலங்கையில் பல அழிவுகளை மக்கள் சந்தித்தனர் இது யுத்தம் தொடர்ந்ததற்கும் ஒரு காரணமாக அமைந்தது.
அதிலும் மதரீதியாக மக்களை தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்துவதில் புத்த தர்மத்தை போதிக்கும் சில பௌத்த பிக்குகள் அன்று தொடக்கம் இன்று வரை இருந்தே வருகின்றணர்.
அதற்கு இலங்கை அரசின் காவல் பிரிவிணர்(பொலிஸ்) தேவை ஏற்படும் போது இராணுவத்திணரும் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.
இந்த அடிப்படையில் இன்னும் இது தொடர்கின்றதா?
இந்த சாம்பல் தீவு சந்தியானது தமிழர்களின் பூர்வீக பூமி யாரும் மறுக்கவோ மறைக்கவோ  முடியாதது.
எனவே இந்த இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிகொண்டிருக்கும் அரசாங்கத்தையும் மீறீயா இவைகள் நடக்கின்றன?இப்படி சென்றால் எப்படி நல்லிணக்கம் புரிந்துணர் என்பதை எப்படி மக்களிடையே ஏற்படுத்த முடியும்.
மக்களை வழிநடத்த வேண்டியவர்களே மதகுருமார்கள் இவர்களே மக்களை மாயைக்குள் இழுத்து சென்று அவர்களை பாவங்களை செய்ய தூண்டிவீடுகின்றனர்.
எனவே இவ்வாறன செயல் பாட்டை கண்டிப்பதுடன் உடனடியாக இந்த புத்தர் சிலை வைப்பதை தடுத்து நிறுத்தி அரசானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் அரசாங்கத்தையும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களையும் இறையன்போடு கேட்டுக் கொள்கின்றதென அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதீ சாம்பல் தீவு சந்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்க ஏற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதீ சாம்பல் தீவு சந்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்க ஏற்பாடு Reviewed by Madawala News on 7/12/2016 05:03:00 PM Rating: 5