Free Space

உணவுப் பகுதிகள் இருகியதில் முதியவர் உயிரிழப்பு.



(மொஹொமட் ஆஸிக்)

உணவுப் பகுதிகள் இருகியதில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கட்டுகஸ்தோட்டையில் நேற்று 11 ம் திகதி  இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கட்டுகஸ்தோட்டை கஹல்ல எனுமிடத்தை சேர்ந்த டீ.ஜீ. சிரிசேன என்ற 78 வயதுடைய முதியவராவார்.

கடந்த 9 ம் திகதி  வைத்திய சாலைக்குச் சென்று வீடு திரும்பிய பின் இவர் வீட்டினுல் விழுந்துள்ளதுடன் பின்னர் அவரது மனைவி அவரை பிடித்துக் கொண்டுள்ளார்.

இதில் இவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்க வில்லை.

இருந்த போதும் நேற்று 11 ம் திகதி இவருக்கு மூச்சு திமிரல் ஏற்பட்டுள்ளதுடன் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ர்.  பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இம் மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணையை கண்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜயதிலக்க நடாத்தியதுடன் பிரேத பரிசொதனையை கண்டி போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் நடாத்தினார்.

இம் மரணம் உணவின் பகுதிகள் இருகி  மூச்சி இருகியதன் காரணமாக ஏற்பட்ட மரணம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தினர்.

  ஆஸிக் 

உணவுப் பகுதிகள் இருகியதில் முதியவர் உயிரிழப்பு. உணவுப் பகுதிகள் இருகியதில் முதியவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 7/12/2016 03:39:00 PM Rating: 5