கண்டி பள்ளிவீதி பெயர்கல் விவகாரம் ! யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை : லாபிர் ஹாஜியார் ...


கண்டி பள்ளிவீதி என்ற வீதியின் பெயரை குமார வீதி மற்றம் செய்யக்கோரி சில வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை முனவைக்கப்பட்டு வந்த  நிலையில் இன்றைய தினம் குறித்த பாதையின் பெயர் கல்லை ஒரு சிலர் பலவந்தமாக அகற்றப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில் 

அதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த பாதையின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதுடன் சட்டவிரோதமாக பெயர்கல்லை அகற்ற எவரும் வந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பின் நிற்க போவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கிடைத்தது.

மேலும் குறித்த செய்தி பரவியமையை தொடர்ந்து பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியர்  நிலமையை ஆராய்ந்துள்ளார்.

மேலும் பிரதேச பாதுகாப்பை பொலிஸார் உறுதி செய்துள்ளதாகவும் எவரும் அச்சம் கொள்ளும் அளவுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறவில்லை எனவும் முஸ்லீம்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
கண்டி பள்ளிவீதி பெயர்கல் விவகாரம் ! யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை : லாபிர் ஹாஜியார் ... கண்டி பள்ளிவீதி பெயர்கல் விவகாரம் ! யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை : லாபிர் ஹாஜியார் ... Reviewed by Madawala News on 7/17/2016 03:32:00 PM Rating: 5