Free Space

இஸ்லாத்தை நசுக்க நினைத்தால் அது பல இடங்களில் முளைவிட்டு எழுச்சி பெரும் என்பதே நிஜம்.


-எம்.வை.இர்பான் -

அல் குர் ஆன் வசனங்கள் தங்கள் காதுகளில் கேட்க கூடாததென்று தமது காதுகளை பஞ்சியால் அடைத்துக் கொண்டார்கள் அன்றைய இறை மறுப்பாளர்கள் இவ் அற்புத குர் ஆன் வசனங்கள் தங்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விடுமென பயந்தே அவ்வாறு செய்தார்கள் அதே போன்றொரு நிலைதான் இன்று உலகம் பூராகவும் நடைபெறுகிறது. 

இஸ்லாத்திற்கெதிரான சதிகள் உலகமெங்கும் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் இலங்கையில்  முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  ஹலாலில் துவங்கிய வெறுப்புப் பிரசாரம் இன்று குர் ஆனை தடை செய்ய வேண்டுமென்ற நிலைக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.இஸ்லாமிய எழுச்சியை கண்டு இறை மறுப்பாளர்களின் மனதில் ஏற்படட பீதியே இதற்கான காரணம்.

இந்தியாவிலும்  கடந்த சில நாட்களாக அறிவு பூர்வமாக  த ஃவா பணி செய்யும் Dr . சாக்கீர் நாயிக் அவர்களின் மீது மொய் குற்றச் சாட்டு சுமத்தி அவரின் காரியாலயத்தையும், Peace TV யையும் முடக்குவதற்கு  மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

மீடியாக்களின் இலவச விளம்பரத்தால் சாக்கீர் நாயிக்கின் உரைகளை அதிகமானவர்கள் கேட்பதற்கு வாய்ப்பிருக்கின்றது.இஸ்லாத்தை புரிவதற்கும் ஒரு வழி சமைத்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை நசுக்க நினைத்தால் அது பல இடங்களில் முளைவிட்டு எழுச்சி பெரும் என்பதே நிஜம். 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். 

அல் குர் ஆன் 3:19

(இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான். அல் குர் ஆன் 9:33

இஸ்லாத்தை ஒடுக்குவதற்கு எத்தனை சதிகள் செய்தபோதிலும் இஸ்லாமே மிகைக்கும் என்ற இறை வாக்கு மன திருப்பதியளிக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் 

7AF05092-428A-4C3E-8CE8-B48C3B8C183D

இஸ்லாத்தை நசுக்க நினைத்தால் அது பல இடங்களில் முளைவிட்டு எழுச்சி பெரும் என்பதே நிஜம். இஸ்லாத்தை நசுக்க நினைத்தால் அது பல இடங்களில் முளைவிட்டு எழுச்சி பெரும் என்பதே நிஜம். Reviewed by Madawala News on 7/12/2016 08:15:00 AM Rating: 5