Free Space

காயம் காரணமாக கிரிஸ்டியானோ வெளியேறிய போதும் போராடி ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது போர்த்துக்கல் ...


கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் போர்த்துக்கல் அணி செம்பியனானது.

ஐரோப்பா கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் பிரான்சில் நடைபெற்று வந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிறு)மோதின.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் 24 வது நிமிடத்திலே நட்சத்திர போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார்.

மிகவும் சிறப்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் கோல் எதனையும் போடவில்லை.

ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் 108 வது நிமிடத்தில் போர்த்துக்கல் முன்னணி வீரர் ஏடேர் கோல் ஒன்றை போட அவ்வணி முன்னணி பெற்றது.

கடைசி வரை போராடிய பிரான்ஸ் தோல்வியை தழுவியது.
காயம் காரணமாக கிரிஸ்டியானோ வெளியேறிய போதும் போராடி ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது போர்த்துக்கல் ... காயம் காரணமாக கிரிஸ்டியானோ வெளியேறிய போதும் போராடி ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது போர்த்துக்கல் ... Reviewed by Madawala News on 7/11/2016 02:34:00 AM Rating: 5