சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்களும் விதி விலக்கான அம்பாறை அரச வெளிக்கள உத்தியோகத்தர்களும்..!


(இளைய நிலா)
மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு முன்மொழிவுத்திட்டத்திற்கமைவாக நாட்டில் உள்ள அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் சலுகை அடிப்படையில் (50000ரூபா) மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டதற்கமமைய அனுராதபுரத்தில் தொடங்கிய ஆரம்பம் அதனைத் தொடர்ந்து மாத்தளை, பொலநறுவை என நாட்டின் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டத்திலும் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரையும் அம்பாறை மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமையினால் அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் மிகுந்த மனவேதனையுடனும் கவலையுடனும், அதிர்ப்தியுடன் இருக்கின்றனர்.இவை வழங்கப்படுமா? என்பதில் அரச உத்தியோகத்தர்களிடையே இன்று வரை ஏக்கத்துடன் இருக்கின்றார்கள்.
ஏனைய மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள்; அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படாமைக்கு யார்தான் காரணம் அரச நிருவாகத்துறையில் இருந்த அரச அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா....? என்று தெரியாதுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட பாதிக்கப்பட்ட அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை ஏன் வழங்கப்படவில்லை என்று அம்பாறை மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் தமது ஆதங்கங்களை மனதுக்குள்ளேயே கொட்டித்தீர்ப்பதனை அவர்களின் பேச்சுக்களில் இருந்து அவதானிக்க முடிகிறது. 24 மாவட்டங்களில் வழங்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளுக்கு அம்பாறை மாவட்ட வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் மட்டும் விதிவிலக்கானது ஏன்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் இன்று காணல் நீராகியுள்ளதாக அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அம்பாறை மாவட்டத்தில் கடமை புரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக மோட்டார் சைக்கிள்கள் வழங்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ அண்மையில் திறைசேரிச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அரச உத்தியோகத்தர்கள் விடயத்தில் ஒரு ஆளுநருக்கு இருக்கும் அக்கரையைப் பார்க்கின்ற போது இந்த அக்கரை ஏன் அரசியல்வாதிகளிடம் இல்லை என்பதுதான் கவலையான விடயம்.
 
அம்பாறை மாவட்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் அம்பாறை மாவட்ட அமைச்சர்கள்;;;; மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உடனடியாக மோட்டார் சைக்கிள்கள் வழங்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது.
 
அம்பாறை மாவட்ட சிங்கள முஸ்லிம் தமிழ் சமூக அமைச்சர்மார்களே பாராளுமன்ற உறுப்பினர்களே........எங்கள் அஞ்சல் வாக்குகள் உங்களுக்கு உதவியது போல் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய ஏன் முன்வருகின்றீர்கள் இல்லை.
சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்களும் விதி விலக்கான அம்பாறை அரச வெளிக்கள உத்தியோகத்தர்களும்..! சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்களும் விதி விலக்கான அம்பாறை அரச வெளிக்கள உத்தியோகத்தர்களும்..!  Reviewed by Madawala News on 7/09/2016 03:18:00 PM Rating: 5