Oceas

தற்கொலை செய்துகொண்டு கொலை செய்வதாக கூறும் அதிகாரத்தை வழங்கியது யார் ?


நபிகள் நாயகம் ஊடாக அல்லாஹ்விடம் முறையிடுங்கள் என கூறுவது அல்லாஹ்வை அல்லது நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக குர்ஆனில் எங்கு குறிப்பிடப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ...

"ஞானசார தேரர் பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டு கொப்பியை நபிகள் ஊடாக அல்லாஹுக்கு அனுப்ப கோருவது அல்லாஹ்வை அல்லது நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை இதனை அசாத் சாலி அல்லாஹ்வையும் நபியையும் அவமதிப்பதாக விளங்கிக்கொள்வார் என்றால் அவருக்கு அல் குர் ஆன் தொடர்பில் தெளிவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

நபிகள் நாயகம் ஊடாக அல்லாஹ்விடம் முறையிடுங்கள் என கூறுவது அல்லாஹ்வை அல்லது நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதை முடியுமானல்  அசாத் சாலி நிரூபித்துக்காட்டட்டும் என சவால் விடுக்கிறோம்.

தப்பித்தவறியாவது அசாத் சாலி வங்கதேச பக்கம் சென்றால் குர் ஆன் தெரியாது என கொலைசெய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை.

இந்த நாட்டு சட்டப்படி கொலை செய்வது கொலைக்கு தூண்டுவது தற்கொலைக்கு முயற்சி செய்வது ஆகியவை தண்டனைக்குறிய குற்றம் பொலிஸார் ஆசாத் சாலியை கைது செய்து இந்த நாட்டில் நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லை என்பது நிரூபிக்க வேண்டும்.

நபிகளின் பெயரைக்குறிப்பிட்ட மாத்திரத்தில் தற்கொலை செய்துகொண்டு கொலை செய்வேன் என்று கூறும் அதிகாரத்தை ஆசாத் சாலிக்கு வழங்கியது யார் இந்த அறிக்கை மூலம் இந்த நாட்டில் கருத்து கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் சம்பளம் பெரும் ஜனாதிபதியின் அரவணைப்பில் உள்ள ஒருவர் இவ்வாறான விடத்தை கூறியிருப்பது பாரதூரமான விடயம்."

என அவர் குறிப்பிட்டார்.




தற்கொலை செய்துகொண்டு கொலை செய்வதாக கூறும் அதிகாரத்தை வழங்கியது யார் ? தற்கொலை செய்துகொண்டு கொலை செய்வதாக கூறும் அதிகாரத்தை வழங்கியது யார் ? Reviewed by Madawala News on 7/07/2016 03:12:00 PM Rating: 5