கிழக்கின் எழுச்சி எனும் விடயத்தை பெரிதுபடுத்தி மு.கா தலைமையை பணயக் கைதியாக்கும் புதிய போராளிகள்...

-அஸ்மி ஏ கபூர்-

கிழக்கின் எழுச்சி எனும் விடயத்தை பெரிதுபடுத்தி மு.கா தலைமையை பணயக் கைதியாக்கும் புதிய போராளிகள். 

கிழக்கின் எழுச்சி என்கின்ற மு.கா தலைமை கிழக்குக்கு வேண்டுமென்கிற கோசம் கட்சிக்குள் இருக்கின்ற சிலரின் மிக வலுவான பின்னனியோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிற அதே நேரம் வலுவான அரசியல் காரணிகள் ஏதுமற்ற ஒரு சந்தர்பவாத செயற்பாடக அதை கருதி எடுத்துக் கொள்ளலாம் 
ஆனால் 
பசீர் சேகு தாவூத் ஹஸனலி போன்றவர்களுக்கு தலைமை பா.உ விடயத்தில் நடந்த கொண்ட விதம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையே இன்று வேறு விதமான அரசியல் நகர்வுகளுக்கு வித்திட்டிருக்கிறது

மீளவும்  ஹசனலி பசீர் போன்றோர் தேசிய பட்டியல் பா.உ பெற மாட்டார்கள் அவ்வாறு பெறுவதாயின் அவர்கள் அரசியலின் இறுதியை நெருங்கி விட்டார்கள் என அடித்து கூற முடியும் 

இவ்வாறான கால கட்டத்தில் ஒரு தேர்தலை மு.கா எதிர் கொள்வதாக இருந்தாலும் கட்சி செயலாளர் தவிசாளர் போன்ற சர்ச்சை தாக்கத்தை ஏற்படுத்தவும் சந்தர்ப்பமிருகிறது

இவற்றையல்லாம் நன்கு உணர்ந்த இன்று சிறு சிறு அதிகாரங்களில் உள்ளவர்கள் மேலும் அதிகாரத்தை பெற வேண்டுமென்கிற கனவுகளுடன் இருக்கும் கட்சிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்டவர்கள் கிழக்கின் எழுச்சியை பெரிது படுத்தி மு.கா தலைமையை ஒரு வகையான பணயக்கைதி நிலைக்கு இட்டு செல்வதை ஊடக அறிக்கைகள் மூலம் அறியக்கிடைக்கிறது.

அதனால்தான் அவரின் கிழக்கான அண்மைகால வருகைகளை குறிப்பிடலாம் 
கல்முனை சம்மாந்துறை பொத்துவில் அட்டாளைச்சேனை போன்ற பிரதேச திருமணங்கள் விழாக்கள் என்பனவற்றில் காண முடிகிறது 

ஆட்டுடன் புகைப்படம்  ரயில் வண்டி பயணம் சிறிய சிற்றுண்டி சாலை தேநீர் என்பன கிழக்கு மக்களின் எழிமையான வாழ்க்கையை தலைவரும் இருக்கிறார் என்பதை எடுத்தியம்பும் மிக நுண்ணிய ஊடகங்களுடான வேலைத்திட்டமாகும்

மு.கா வினுடைய தலைமை கிழக்கு தொடர்பாக அதீத சிரத்தை கொள்கின்ற அளவுக்கு கிழக்கின் எழுச்சி எடுத்தியம்பட்டிருக்கிறது என்பதும் 
கட்சிக்குள் நடக்கிற ஒரு உள்கட்சி முறுகலின் வெளிப்பாடு என்பதும் வெள்ளிடை மலை
இன்று மு.கா தலைமை ஹக்கிம் பயமுறுத்தப்பட்டிருகிற கிழக்கின் எழுச்சியின் மெருகூட்டல் இன்றைய போரளிகளின் செயற்பாடுகள் முண்ணனி வகிக்கிறது 

இன்னுமொரு தேர்தலின் பின் கிழக்கின் எழுச்சி தொடர்பில் எங்கே என்றும் காண கிடைக்காது

கிழக்கின் எழுச்சி எனும் விடயத்தை பெரிதுபடுத்தி மு.கா தலைமையை பணயக் கைதியாக்கும் புதிய போராளிகள்... கிழக்கின் எழுச்சி எனும் விடயத்தை பெரிதுபடுத்தி மு.கா தலைமையை பணயக் கைதியாக்கும் புதிய போராளிகள்... Reviewed by Madawala News on 7/19/2016 11:24:00 PM Rating: 5