Ad Space Available here

அதிகரித்துவரும் பெளத்த மேலாதிக்கம் !


அடிக்­கொரு லிங்கம் புதைந்­தி­ருக்கும் சிவ­பூமி கோணே­ஷர்­பூமி என்ற நம்­பிக்­கை நீண்­ட­ கா­ல­மா­கவே ஐதீ­கங்­க­ளாக இருந்து வரு­கின்ற திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத் தில் இன்று அடிக்­கொரு புத்தர் சிலை­க ளும் விஹா­ரை­களும் வைக்­கப்­ப­டு­வதும் நிறு­வப்­ப­டு­வதும் மலிந்து போன நிகழ்­வு­க­ளாகக் காணப்­ப­டு­கி­றன.


கடந்த திங்­கட்­கி­ழமை பாது­காப்பும் பந்­தோ­பஸ்தும் புடை சூழ சாம்பல் தீவு சந்­தியில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்டு அதற்­கென குட்­டி­யான அமை­வி­ட­மொன்று அமைக்­கப்­பட்­டி­ருப்­பது திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தை திகி­ல­டைய வைத்­துள்­ளது.

கடந்த ஆறு தசாப்த காலத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் வைக்­கப்­பட்ட சிலை­களில் இது எத்­த­னை­யா­வது சிலை? நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எத்­த­னை­யா­வது காட்­சி­யென்று வினவும் அள­வுக்கு இந்த புத்தர் சிலை விவ­காரம் மாறி­யி­ருக்­கி­றது. திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து நிலா­வெ­ளிக்கு செல்லும் பிர­தான வீதியில் சாம்பல் தீவு சந்­தியில் சுமார் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக சோதனைச் சாவ­டி­யொன்று இருந்து வந்­துள்­ளது.


இச்­சா­வ­டியும் இதனை அண்­டிய இன்­னொரு சாவ­டியும் அண்­மையில் இல்லாமல் செய்­யப்­பட்­ட­துடன் படைத்­த­ரப்­பி­னரால் வைத்து வழி­பட்டு வந்த புத்தர் சிலை­யொன்றும் படைத்­த­ரப்­பி­ன­ரா­லேயே எடுத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தது.


அரச காணி­யா­கவோ அல்­லது தனியார் காணி­யா­கவோ அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டாத இடத்­தி­லி­ருந்த சோத­னைச்­சா­வடி அகற்­றப்­பட்­ட­தன்பின் அவ்­விடம் வெறு­மை­யாக இருந்த நிலையில் அங்கு இயற்­கை­யா­கவே வளர்ந்­தி­ருந்த வேப்­ப­ம­ரத்­த­டியில் கடந்த 8 ஆம் திகதி பிள்­ளையார் சிலை­யொன்றும் வைரவர் சூல­மொன்றும் இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் வைக்­கப்­பட்ட நிலையில் அன்­றைய இரவே பிள்­ளையார் சிலை இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுக்கு நூறாக உடைத் தெறி­யப்­பட்­டுள்­ளது. மீண்டும் இன்­னு­மொரு சிலை மறுநாள் வைக்­கப்­பட்ட போது அதுவும் உடைத்­தெ­றி­யப்­பட்ட நிலையில் ஞாயிறு இரவு புத்தர் சிலைக்கு அருகில் நாட்­டப்­பட்ட சிறிய அளவில் வளர்ந்­தி­ருந்த அரச மர­மொன்று இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் வெட்டி வீழ்த்­தப்­பட்­டி­ருந்­தது.


இதன் வஞ்சம் தீர்ப்­பாக அல்­லது எதிர் விளை­வாக சாம்பல் தீவு சந்தி பௌத்த கொடி­களால் அலங்­க­ரிக்­கப்­பட்டு பந்­தோ­பஸ்து புடை­சூழ ஒரு சில பௌத்­த­கு­ருமார் ஆசீர்­வ­திக்க பேரின கெடு­பி­டி­யா­ளர்கள் வலம் சுற்றி நிற்க செங்­கல்லால் ஆன சிறிய பீட­மொன்று அமைக்­கப்­பட்டு (திங்கள் காலை) புத்தர் சிலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. அதற்கு மிக அருகில் தான் ஸ்ரீ நாரா­யணன் வீற்­றி­ருக்­கிறார் என்­பது திரு­கோ­ண­மலை மக்கள் அனை­வரும் அறிவர்.

இச்­சம்­ப­வ­மா­னது பதற்றத்தை மாத்­தி­ர­மல்ல பல தமி­ழர்­களின் மனதை புண்­ப­டுத்தும் கைங்­க­ரி­ய­மா­கவும் பேசப்­ப­டு­கி­றது.


திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் புத்தர் சிலை வைப்­புக்­களும் விகாரை நிர்­மா­ணங்­களும் நேற்று இன்று ஏற்­பட்ட ஒரு விவ­கா­ர­மல்ல. 1901 ஆம் ஆண்டு திட்­ட­மிட்­ட­மு­றையில் கொண்­டு­வ­ரப்­பட்ட அல்லை – கந்­தளாய் குடி­யேற்­ற­த் திட்­டங்கள் ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்தே இது தொடங்­கப்­பட்ட விவ­கா­ர­மாகும்.


சுதந்­தி­ரத்­துக்குப் பின் சிங்­களக் குடி­யேற்­றங்­களும் புத்தர் சிலை வைப்­பு­களும் பௌத்த விஹாரை நிர்­மா­ணங்­களும் திட்­ட­மிட்ட முறையில் இலங்கை அர­சாங்­கத்­தாலும் பேரி­ன­வா­தி­க­ளாலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட கார­ணத்­தி­னா­லேயே கந்­தளாய், அல்லை, மொற­வேவ, பத­வி­ஸ்ரீ­புர, தெஹி­யத்தை, நீலப்­பொல, திரியாய், ஆண்­டாங்­குளம், வெல்­வேரி, ஸ்ரீபுரம், மிஹிந்­த­புரம், ஸ்ரீமா­புரம், தம்­ப­ல­கமம் போன்ற பாரம்­ப­ரிய கிரா­மங்கள் பறிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல பாரிய இனப்­ப­ரம்­பலும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதும், பட்டும் வரு­கின்ற நிலை­களைக் காண்­கின்றோம்.


புத்­த­பெ­ரு­மானின் பஞ்ச சீலக்­கொள்­கைகள் அகிம்சை, ஆன்­மீகம், அமைதி, இரக்கம், கள்­ளுண்­ணாமை பசிப்­பி­ணி­போக்கல், சமூக நீதி என்­ப­வற்றின் அடிப்­ப­டைத்­தத்­து­வங்­க­ளாக இருந்­து­வந்­துள்­ளது. ஆனால் நடை­மு­றையில் அதன் பிர­யோ­கங்­களும் ஆதிக்­கங்­களும் இலங்­கையில் குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் எத்­த­கைய ஆவே­சத்­தன்­மை­களை உரு­வாக்­கி­வந்­துள்­ளது என்­பதை நோக்­கலாம்.


இரா­வ­ணனால் வழி­பட்­டதும் கி.மு.6000 வருடப் பழைமை கொண்­டதும் ஞான­சம்­பந்­தரால் தேவாரம் பாடி போற்­றப்­பட்­டதும் குளக்­கோட்டு மன்­னனால் புன­ருத்­தா­ரணம் செய்­யப்­பட்­ட­து­மான கோணேஷர் ஆலயம் புனித நக­ர­மாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை திரு­கோ­ண­மலை இந்துப் பெரு­மக்­க­ளாலும் உலக சைவ அனுட்­டா­னி­க­ளாலும் 1968 ஆம் ஆண்டு தேசிய அர­சாங்க காலத்தில் முன் வைக்­கப்­பட்­டது.


இதற்­கென மூவர் கொண்ட குழுவை முன்னாள் பிர­தமர் டட்லி சேனா­நா­யக்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக இருந்த எம்.திருச்­செல்வம் நிய­மித்தார். நடந்­தது என்ன? சேரு­விலை பௌத்த விஹா­ரா­தி­பதி இக்­குழு நிய­ம­னத்­துக்கு கடும் எதிர்ப்புக் காட்­டி­யதன் கார­ண­மாக நிய­மிக்­கப்­பட்ட குழு இரத்துச் செய்­யப்­பட்­டது.


இந்த விவ­கா­ரத்­தினைத் தொடர்ந்து கோணேசர் ஆலய புனித நகரப் பிர­க­டனம் எக்­கா­லமும் இடம்­பெற்று விடக்­கூ­டாது என்­ப­த­னாலோ என்­னவோ கோட்­டை­வா­சலின் மேற்­ப­கு­தியில் 1969 ஆம் ஆண்டு ஆனி­மா­த­ம­ளவில் பிர­மாண்­ட­மான புத்தர் சிலை­யொன்று நிறு­வப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல அதை­யண்­டிய கடற்­க­ரை­யோ­ரத்தில் (ராங்கி பிட்­டிக்­க­ருகில் நிக்­கி­லஷன் லொட்ஜ்) விகா­ரை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.


அர­ச­மரம் பௌத்­தர்­களின் புனித விருட்­ஷ­மாக போற்­றப்­ப­டு­வது சக­ல­ருக்கும் தெரிந்த விடயம். திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் அரச மரத்­த­றிப்பு என்ற சம்­பவம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை சிறை செல்ல வைத்த நிகழ்வும் நடந்­தி­ருக்­கி­றது என்­பதை நாம் அறிந்து கொண்­டுள்ளோம்.

கிளி­வெட்டி மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட ஒரு சுத்­த­மான தமிழ்க் கிராமம். இந்த கிரா­மத்தின் பிர­தான வீதியில் மாரி­யம்மன் கோவிலின் முன் பாரிய விருட்ச­மாக அரச மர­மொன்று இருந்­ததை முன்னாள் குடிகள் நன்­றாக அறிவர்.


 இந்த அரச மரம் இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் 1976 ஆம் ஆண்டு சித்­திரை மாதம் 26 ஆம் நாள் நடு நிசியில் தறிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல இருந்த இடம் தெரி­யா­மலும் ஆக்­கப்­பட்­டது. ஏலவே கிளைகள் தறிக்­கப்­பட்டு கொப்­புக்கள் அற்று காணப்­பட்ட மரமே தறிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.


இந்த ஆல­யத்­துக்கு முன்னால் கடை­யொன்றை வைத்­தி­ருந்த பேரின சமூ­கத்தைச் சேர்ந்த மாட்டின் மற்றும் கிளைகள் தறிக்­கப்­பட்­டதன் பின் காவல் காத்து நின்ற பொலி­ஸாரின் பொய்த்­த­ன­மான தக­வல்­களை அடுத்து முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ.தங்­கத்­துரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு 6 மாதங்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டார். இவ­ருடன் தங்­க­ராஜா என்­ப­வரும் கைது செய்­யப்­பட்­ட­துடன் அமரர் தங்­கத்­து­ரையின் சகோ­தரர் அ.குமா­ர­துரை, சித்­தி­ரவேல் கிரு­பை­ராஜா, கணேஷ் போன்­ற­வர்கள் தலை­ம­றை­வா­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

தொட­ரப்­பட்ட வழக்கு ஆதா­ர­மின்றி தள்­ளுப்­பட்­ட­தனால் அ.தங்­கத்­துரை மற்றும் தங்­க­ராஜா ஆகியோர் விடு­த­லை­யாக்­கப்­பட்­டார்கள். 


திரு­கோ­ண­மலை நகரை கதி­க­லங்க வைத்த இன்­னு­மொரு சம்­பவம் புத்தர் சிலை வைப்­பினால் ஏற்­பட்­டது. 2006 ஆம் ஆண்டு சம்பூர் இடப்­பெ­யர்வு, மாவி­லாறு யுத்தம் ஆகி­யன உக்­கி­ரப்­பட்டு நின்ற காலப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை பொது பஸ் தரிப்பு அண்­டிய மணிக்­கூட்டுக் கோபு­ரத்­துக்கு முன்­பாக புத்தர் சிலை­யொன்று கொண்­டு­வந்து வைக்­கப்­பட்­டது.


இச்­சிலை வைப்­புக்கு இந்­துக்­களும் திரு­கோ­ண­மலை வாழ் மக்­களும் கடும் எதிர்ப்­புக்­காட்­டி­னார்கள். மேலே கோணேஷர் அருகே ஸ்ரீபத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் ஐயனார் கேணி பிள்­ளையார் ஆலயம் கூப்­பிடு தூரத்தில் இவ்­வி­டத்தில் புத்தர் சிலையை வைப்­பதைத் தவிர்த்துக் கொள்­ளும்­படி கோரிக்கை விடப்­பட்­டது. 

ஆட்டோ சாரதி சங்­கத்தின் முன்­னெ­டுப்பில் வைக்­கப்­பட்ட இச்­சிலை வைப்­புக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக திரு­கோ­ண­மலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை பல ஆர்ப்­பாட்­டங்­களை செய்­த­துடன் நகரம் முழு­வதும்-- ஹர்த்தால் மேற்­கொள்­ளப்­பட்­டது. தொடர்ந்து 12 நாட்கள் ஹர்த்தால் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் அப்­போ­தைய ஆளுநர் அலு­வ­ல­கத்தில் சமா­தானக் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. 


இச்­ச­மா­தானக் கூட்­டத்­துக்கு பேர­வையின் தலைவர் வ.விக்ணேஸ்­வரன் தலை­மையில் பேரவை உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சம்­பந்தன், முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இன்­றைய ஜனா­தி­பதி கூட கலந்து கொண்­டி­ருந்தார். 


இனி வருங்­கா­லங்­களில் வீதி ஓரங்­களில், பொது இடங்­களில் சமூகம் அனைத்­தி­னதும் அனு­ம­தி­யின்றி சிலைகள் வைப்­ப­தில்­லை­யென முடிவு எடுக்­கப்­பட்­ட­போதும் தொடர்ந்தும் இந்த அட்­ட­கா­சங்கள் நடந்து கொண்­டுதான் வந்­தன.


இனி வருங்­கா­லங்­களில் வீதி ஓரங்­களில், பொது இடங்­களில் சமூகம் அனைத்­தி­னதும் அனு­ம­தி­யின்றி சிலைகள் வைப்­ப­தில்­லை­யென முடிவு எடுக்­கப்­பட்­ட­போதும் தொடர்ந்தும் இந்த அட்­ட­கா­சங்கள் நடந்து கொண்­டுதான் வந்­தன. 


திரு­கோ­ண­மலை பஸ்­த­ரிப்பு நிலை­யத்தில் வைக்­கப்­பட்ட சிலை­வைப்பை எதிர்த்­ததன் விளை­வாக வங்கி ஊழி­யரும் அன்­றைய திரு­மலை மாவட்ட தமிழ் மக்கள் பேர­வையின் தலை­வ­ரு­மா­கிய வன்­னி­ய­சிங்கம் விக்­ணேஸ்­வரன் அவர் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த இலங்கை வங்கி வளா­கத்தில் வைத்து 2006 ஆம் ஆண்டு சித்­திரை 7 ஆம் திகதி படு கொலை செய்­யப்­பட்டார். இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரி­களின் குண்டு இவரைப் பலி கொண்­டது. 


திரு­கோ­ண­ம­லையில் புகழ் பூத்த கிராமம் தம்­ப­ல­காமம். வயல்­களும் வனப்பும் நிறைந்த இப்­பி­ர­தேசம் குளக்­கோட்டன் காலத்­துக்கு முன்­பி­ருந்தே பாரம்­ப­ரிய தமிழ்க் கிரா­ம­மாக விளங்­கி­யது. 


திரு­கோ­ண­மலை– கொழும்பு வீதியில் (ஏ – 6) தம்­ப­ல­கமம் சந்­தியில் பிள்­ளையார் சிலை­யொன்று கோயில் அமைத்து வழி­பட்டு வரப்­பட்ட இடத்தில் புண்­ணிய மூர்த்தி என்­ப­வ­ராலும் தம்­ப­ல­காமம் குடி­க­ளாலும் நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஆலயம் இந்­திய இரா­ணுவ வெளி­யேற்­றத்தைத் தொடர்ந்து இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை நிறு­வப்­பட்­டதும் தம்­ப­ல­காமம் ஆதி­கோ­ணேஷர் ஆல­யத்­துக்கு முன்­னுள்ள முச்­சந்தி அக்­கா­லத்தில் அங்­கா­டிபோல் மக்கள் கூடும் இட­மாக இருந்­தது என்­பது தம்­ப­ல­காமம் குடி­க­ளுக்கு நன்­றாகத் தெரிந்த விடயம். அச்­சந்­தியில் முன்னாள் விடு­தலைப் போரா­ளிகள், போரா­ளிகள் நினை­வாக தூபி­யொன்றை அமைத்­தி­ருந்­தார்கள்.


ஏலவே குறிப்­பிட்­டது போல் இந்­திய இரா­ணுவ வெளி­யேற்­றத்தைத் தொடர்ந்து (1990. மே.) தூபி இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்டு அதே இடத்தில் நிறு­வப்­பட்­டி­ருக்கும் புத்­தர்­சிலை இன்னும் இருந்து கொண்­டி­ருப்­பதை யாவரும் பார்க்­கலாம். 


இரா­வ­ணே­ஷனின் தாயாரின் (கைகேசி) ஈமக்­கி­ரி­கை­களை செய்­வ­தற்­காக விஷ்ணு பக­வானால் உரு­வாக்­கப்­பட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று வர­லாற்­றுக்­காலம் முதல் இந்­துக்­களின் சமய சடங்­குகள் பேணப்­படும் இட­மா­கவும் சிவன், பிள்­ளையார், முருகன் என மூன்று ஆல­யங்கள் அமைந்­தி­ருந்த புனித பூமி­யா­கவும் அகஸ்­திய முனி­வரின் மனம் கவர்ந்த இட­மா­கவும் போற்­றப்­பட்­டதும் வழி­பட்­ட­து­மான இட­மாகும். 


யுத்த முஸ்­தீ­புக்­களால் பரா­ம­ரிக்­கப்­ப­டா­மலும் சூனியப் பிர­தே­ச­மா­கவும் இருந்த கன்­னியா வெந்நீர் ஊற்­றுப்­ப­கு­தியை புன­ர­மைத்து சீரற்ற பிள்­ளையார் ஆல­யத்தை புன­ர­மைக்க 2002 ஆம் ஆண்டு உப்பு வெளி பிர­தேச சபை­யினால் எடுக்­கப்­பட்ட முயற்­சி­யினால் உப்பு வெளி விஹாரை விஹா­ரா­தி­ப­தி­யினால் தொல்­பொருள் காரணம் காட்டி தடுத்து நிறுத்­தப்­பட்­டது.


வன்னி யுத்த வெற்­றியின் மம­தை­யினால் 2010 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 5 ஆம் திகதி திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மை­யி­லான குழு­வொன்று கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பகு­திக்குள் நுழைந்து கன்­னி­யாவின் தொன்­மை­யான வர­லாற்றுக் குறிப்­ப­டங்­கிய பல­கை­யையும் ஏனைய அடை­யா­ளங்­க­ளையும் துவம்சம் செய்­தது மாத்­தி­ர­மின்றி 1957 ஆம் ஆண்டு முதல் உப்­பு­வெளி பிர­தேச சபையால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த உரிமைச் சான்­று­களை உடைத்­தெ­றிந்­து­விட்டு இப்­பி­ர­தேசம் தொல்­பொருள் சார் பிர­தே­ச­மென பிர­க­ட­னப்­ப­டுத்திச் சென்­ற­துடன் பிர­தேச சபைக்­கு­ரிய உரி­மங்கள் அனைத்தும் பறித்­தெ­டுக்­கப்­பட்­டன. பறித்­தெ­டுத்­த­துடன் இந்­நி­கழ்வு நின்று விட­வில்லை. 


வெந்நீர் ஊற்­றுக்கு மேல் உள்ள மேட்டுப் பகு­தியில் புத்தர் சிலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு விஹா­ரையைப் போல் பிரித்­தோதும் நட­வ­டிக்­கை­களும் தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. 


மூன்று தசாப்­தங்­க­ளையும் பல்­லா­யிரம் உயிர்­க­ளையும் கோடிக்­க­ணக்­கான உட­மை­க­ளையும் ஏப்பம் விட்ட உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு வந்­த­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் இலங்கைத் தீவில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் சிங்­களப் பௌத்த பேரின வாதத்தின் மத ஆக்­கி­ர­மிப்­புக்­களின் இன்­னு­மொரு நட­வ­டிக்­கைதான் 2012 ஆம் ஆண்டு பௌத்­தர்­களே இல்­லாத மூதூர் ஜபல் நகர் மலை­ய­டி­வா­ரத்தை அண்­டி­யுள்ள பகு­தியில் பெரி­ய­புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்டு பிரித் ஓதப்­படும் கைங்­க­ரியம் தொடங்கி வைக்­கப்­பட்­டது (2012 ஆகஸ்ட்) இவ்­வி­டத்தில் பௌத்த மத்­திய நிலை­ய­மொன்றும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற வதந்­தி­களும் அக்­கா­லப்­ப­குதியில் தீவி­ர­மாக பர­வி­யி­ருந்­தது.


அன்­றைய காலப்­ப­கு­தியில் மூதூ­ருக்கும் கிண்­ணி­யா­வுக்கும் விஜயம் செய்­தி­ருந்த முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஒரு­வாக்­கு­று­தியை நல்­கி­யி­ருந்தார். ஜபல் நகர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விஹா­ரையோ புத்­தர்­சி­லையோ ஒரு­போதும் வைக்­கப்­ப­ட­மாட்­டாது சகல இனங்­க­ளுக்கும் பொது­வான அம்­ம­லையை ஒரு மதத்­த­வ­ரது வழி­பாட்­டுக்கு அரசு வழங்­காது எனக் கூறி­யி­ருந்தார். நடந்­தது என்ன என்­பதை திரு­கோ­ண­மலை வாசிகள் நன்கு அறிவர். 


திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள இந்து பாரம்­ப­ரி­யங்கள் மாத்­தி­ர­மல்ல. இஸ்­லா­மிய மற்றும் கிறிஸ்­தவ பாரம்­ப­ரி­யங்­களும் பூர்­வீ­கங்­களும் பறிக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு இன்னும் பல உதா­ர­ணங்­களைக் காட்ட முடியும். முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிர­தேசம் புல்­மோட்டைப் பிர­தேசம். இப்­பி­ர­தே­சத்தில் முதலாம் கிராம சேவகர் பிரி­வுக்குட்­பட்ட அர­சி­ம­லைக்­குடா என்று அழைக்­கப்­படும் பொன்­ம­லைக்­குடா கிரா­மத்­தி­லுள்ள 500 ஏக்கர் நிலப்­ப­கு­தியில் பௌத்த விஹா­ரை­ யொன்று அமைக்க 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் அப்­ப­குதி மக்­களின் கடும் எதிர்ப்­பினால் கைவி­டப்­பட்­டது. புனித பூமி­யென்னும் பெயரில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளையும் காணி­க­ளையும் ஆலய வளா­கங்­க­ளையும் கப­ளீ­கரம் செய்யும் நட­வ­டிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 


இதுபோலவே திருமலைமாவட்டத்தின் கொட்டியாரக் குடாவின் கரையோரக் கிராமங்களில் வெள்ளிமணல் கிராம சேவகர் பிரிவுக்குள் அடங்கும் கருமலை ஊற்றுப் பள்ளிவாசல் 1994 ஆம் ஆண்டுமுதல் முகாமிட்ட நிலையில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அப்பகுதி மக்கள் 2012 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியதை நாம் மறந்து விடமுடியாது.


இந்த தொந்தரவு கிறிஸ்தவ மதத்தினரையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு வெள்ளை மாபிள் பீச் பகுதிக்குள் உள்ளடங்கியிருக்கும் தேவாலய காணி வெல்வேரி கிறிஸ்தவ ஆலயத்தில் அமர்ந்திருக்கும் வாள் ஏந்திய சிலை போராளிகளை ஞாபகம் கொள்ள வைக்கிறது என்ற தடுப்பு பிறமதங்கள் மீது காட்டும் கெடுபிடிகளுக்கு உதாரணமாகும். 

திருகோணமலை அநுராதபுர பிரதான வீதியில் உள்ள வெல்வேரிக் கிராமத்தின் கிறிஸ்தவ தேவாலயம் போர்த்துக்கீசர் காலத்தில் போர் வீரர்கள் வணங்க அமைக்கப்பட்ட தேவாலயமாகும். இவ் வாலயத்தின் வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் காணப்படுவதாக கிறிஸ்தவ மதத்தினர் மனம் வேதனைப்படுவதை கேட்க முடிகிறது. 


நெல்சன் தியேட்டருக்கு முன்பாக உள்ள தரிசு நிலத்தில் இயற்கையாகவே வளர்ந்திருக்கும் அரசமரங்களுக்கு தொல்பொருள் நியாயங்களும் பௌத்த திரிபீடகக் கதைகளும் உதாரணங்களாக கூறப்பட்டு தடுத் தாட்கொள்ளப்பட்டிருக்கிறது.வில்கம் விஹாரை, திரியாய் விஹாரை, இலங் கைத்துறை (லங்காபட்டுவ) போன்ற பாரம்பரியப் பிரதேசங்களுக்கு நேர்ந்த கதி திருகோணமலையிலுள்ள பல ஆலயங்களுக்கும் பூர்வீக இடங்களுக்கும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்க அரசாங் கம் எதை முன்னெடுக்குமென்பதை ஆரு டக்காரரும் சாஸ்திரக்காரருமே சொல்ல முடியும்.


அதிகரித்துவரும் பெளத்த மேலாதிக்கம் ! அதிகரித்துவரும் பெளத்த மேலாதிக்கம் ! Reviewed by Madawala News on 7/17/2016 09:21:00 AM Rating: 5