Free Space

தவறான பத்தவாக்களால் வீணாகிப் போகும் ஏழைகளின் சொத்துக்கள்..


-ARM INAS-
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக்கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்" என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

 அனுபவம் 1

நோன்பு 29 அன்று பித்ராவாக இலங்கையின் பிரதானஉணவான அரிசை மஸ்ஜித்களில் கையளிக்கவும். அரிசைதவிர்ந்த வேறெதுவும் பித்ராவாக கொடுக்க கூடாது என்றபத்வா வெளியிடப்பட்டது.  மஸ்ஜித்கள் அனைத்திலும்அரிசி மலையாக வந்து குவிந்தது. 

நமது பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன் வெள்ளம் வந்துஅதற்கு நிவாரணமாக கிடைத்த பொருட்களில் அரிசி தான்அதிகம் என்று சொல்லாம்.  பாதிக்கப்பட்ட ஒவ்வொருவீட்டிலும் அரிசி மலையாக குவிந்திருந்தது. மஸ்ஜித்களும்அரிசை சேகரித்து அரிசை பித்ராவாக பங்கீடுசெய்தார்கள். பித்ராவாக கிடைத்த அரிசியைத்தான்இவர்கள் பெருநாளன்று சமைத்து உண்டார்கள் என்றுயாராலும் உறுதியாக கூற முடியாது. 

பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தேவைக்கு அதிகமாகஅரிசி இருந்ததால் பலரும் அரிசை கடைக்கு விற்பனைசெய்து பணத்தை பெற்றார்கள் என்பதே எமக்கு கிடைத்தநம் கண்களால் கண்ட காட்சி. பாதிக்கப்படாதவர்களின்பலரின் வீடுகளிலும் இது தான் நிலைமை.

அனுபவம் 2

நோன்பு 25 இருக்கும் ' உங்கள் பித்ராவை பணமாகவும்தரலாம். அரிசியை மட்டும் தான் பித்ராவாக தர வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு சார்பாக இமாம்கள் பலர் பத்வா வெளியிட்டுள்ளனர். பித்ராவின் நோக்கத்தையேநாம் பார்க்க வேண்டும் பித்ரா நடைமுறைபடுத்தப்படுதன் மூலம் இஸ்லாம் அடைய நினைக்கும் இலக்கையே பார்க்கவேண்டும் என்று கூறி ஒரு சாரார் பித்ராவை பணமாகசேகரித்து. 29 ஆம் அன்று இரவு அவற்றின் மூலம் ஒருகுடும்பத்துக்கு பெருநாளைக்கு சமைக்கத் தேவையாகஅத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து பொதிசெய்து அந்த பொதியுடன் சேர்த்து 1000 பணத்தையும்கையில் வழங்கினர். சுமார் 150 குடும்பங்களுக்கு இவர்கள்இவ்வாறு பெருநாளைக்கு சமைக்கத் தேவையானபொருட்கள் அடங்கிய பொதியை வழங்கினர்.

இந்தப் பொதியை பெற்றவர்கள் பித்ராவாக வழங்கப்பட்ட பொருட்களை  பெருநாளன்றே சமைத்து  சாப்பாட்டுக்குஎந்த செலவுமின்றி பெருநாளன்று  சமைத்து உண்பதனைகாண முடிந்தது. அப்படி இப்பொதியை பித்ராவாக பெற்றஒரு ஏழை குடும்பஸ்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,நீங்களும் வெறும் அரிசை தந்து விட்டுப் போவீர்கள் என்றுநினைத்தேன். பலரும் அரிசை அள்ளி அள்ளி தந்தாலும்நமக்கு நல்ல கரி வாங்க பணம் இல்லை என்பதனையாரும் யோசிப்பதில்லை. நீங்கள் பித்ராவைநடைமுறைபடுத்தும் இம்முறை உண்மையில் எங்களைப்போன்ற ஏழைகளுக்கு மிக பயனுள்ளதொரு முறை எனதெரிவித்தார்'

அனுபவம் 3

நோன்பு 22 இருக்கும் முகப்புத்தகத் தில்இப்படியானதொரு அறிவிப்பை பார்த்தேன்

'ஏழைகளின் வீட்டிலும் பெருநாள்' என்று தலைப்பிடப்பட்டு

'அடுத்தவர்கள் பசித்திருக்க நாம் புசித்திருக்கலாமா?'

நோன்புக் பெருநாளன்று ஒரு ஏழைக் குடும்பத்துக்குஉணவளிப்போம் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்' ஒரு குடும்பத்துக்கான செலவு 2500

அந்த அறிவிப்பில் மேலே குறிப்பிட்டவாறு ஒரு விளம்பரம்பதியப்பட்டிருந்தது.

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய சகோதரர்கள்பெருநாளன்று அவர்களின் அனுபவத்தை முகநூலில் இவ்வாறு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இன்றைய பெருநாள்தினத்தில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களினை சந்தோசப்படுத்தும் நோக்கிலும்தந்தையை இழந்து துயருறும் சின்னஞ்சிறுசுகளின் உள்ளங்களிற்கு ஆறுதலளித்து அரவணைக்கும்நோக்கிலும் நோன்பு உணர்த்திய பசியின் கொடுமையிலிருந்து இன்றைய பகல் பொழுதிலும்இனிவரும் பொழுதுகளிலும் இச்சகோதரிகளையும்அவர்தம் அன்புக்குழந்தைகளையும் மீட்டெடுக்கும்மகத்தான பணியின் முதல்நாள் காட்சிகளே இவைஅடையாங்காணப்பட்ட 47 குடும்பங்களுக்கு இன்றுபகலுணவு முகநூல் சொந்தங்களின் அன்பளிப்பினால் வழங்கிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். 

சாப்பாட்டுச் சஹன் ஒன்றினை வழங்கிவிட்டு ஆட்டோவில்ஏறும்போது வந்த அழைப்பின் மறுமுனையில் நான்குகுழந்தைகளின் தாய் 

'ஜஸாகல்லாஹு கைரா இப்படி உணவுகளைபோட்டோக்களில்தான் பார்த்துள்ளோம் அதனைருசிபார்க்க சந்தர்ப்பமளித்த உங்களுக்கு ' என்றுகூறினால் எனது கண்கள் பனித்தன உள்ளம் அல்ஹம்துலில்லாஹ் என்றது ஏழை வீட்டிலும் இன்றுபெருநாள் என்ற சந்தோசம் மட்டற்ற மகிழ்ச்சியைஏற்படுத்தியது.

மற்றுமொரு அழைப்பு எனது வீட்டிலிருந்து 2.30 மணிக்குமறுமுனையில் சின்ன மகள் 'அபீ சாப்பிடவாங்களேன்' இதோ வருகின்றேன் என்றபடி

இந்நாளில் வாப்பா சாப்பிட வாங்களேன் என்று கூப்பிடமுடியாமலும் நமது வாப்பா இருந்திருந்தால் .......? என்றஏக்கங்களோடும் வாழும் குழந்தைகளை என்னி மனதுஅழுதவனாக வீடுசென்றேன்.

அல்ஹம்துலில்லாஹ் முகநூல்வழியாக எமதுவேண்டுகோளை ஏற்று பண உதவிபுரிந்தஇஇப்பணியைவெற்றிபெறச்செய்ய கள உழைப்புச்செய்த அனைவருக்கும்நன்றிகள் அல்லாஹ்வே கூலிதரப்போதுமானவன்.

இன்றோடு முடிக்கவொன்னா இப்பணி என்றுமே தொடரஎனக்கும் என் தோழமைகளுக்கும் அருள்புரிவாயாகஆமீன்.

இந்த 3 நடைமுறையிலும் யார் சரி? யார் பிழை எனவிவாதம் நடாத்துவதனை விட இதில் எந்த நடைமுறைசிறந்ததுஇ  ஏழைகளுக்கு அதிகம் பிரயோசனமானது எந்தநடைமுறை என நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும்.

நபியவர்கள் மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அடைய விரும்பும்இலக்குகளான ஏழைகள் யாரும் பெருநாளன்று பசித்திருக்க கூடாது,பெருநாளன்று ஏழைகள் சந்தோசமாக இருக்க வேண்டும்.

என்ற இந்த உயர் இலக்குகளை அடைய பொருத்தமானநடைமுறை  எதுவென்று நாம் தெரிவு செய்து. குறிப்பிட்டநடைமுறையை நாம் மஸ்ஜித்வாரியாக நடைமுறைபடுத்திஅடுத்த ரமழானில் நம் நாட்டில் வாழும் அனைத்துஏழைகளுக்கும் 3ஆம் அனுபவத்தில் குறிப்பிட்டவாறானஒரு அற்புதமான அனுபவத்தை வழங்க  முயற்சிப்போம்.

நபியவர்கள் காலத்தில் குதிரைக்கு ஸகாத்வசூலிக்கப்பட்வில்லை ஆனால் கலீபா உமர்(றழி) அவர்களின் காலத்தில் குதிரைக்கு ஸகாத் வசூலித்தார்கள். கலீபா உமர் அவர்களின் இச்செயற்பாடு ஒரு போதும்சுன்னாவுக்கோ நபியவர்களின் கட்டளைக்கோமாற்றமானதல்ல. ஏன் எனில் கலீபா உமர் அவர்கள்ஸகாத்தின் நோக்கம் இலக்கு அதன் பிரயோக வடிவம்அனைத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள். கலீபா உமர் அவர்களுக்கு இருந்த தெளிவு இன்றுசமகாலத்தில் பலருக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். 

அதனால் தான் ஸகாதுல் பித்ர் ஸகாத் போன்ற உயரியஇலக்குடன் கூடிய திட்டங்கள் சமூகத்தில் பரவலாகநடைமுறைபடுத்தப்பட்ட போதும் அதன் சிறந்தவிளைவுகளை சமூகத்தில் காண முடியாதுள்ளது. இதற்கான் காரணம் இஸ்லாத்தின் இந்த உயரியகோட்பாடுகள் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமகாலசமூகத்துக்கு தெளிவின்மையே.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் கட்டாயம் கரிசணைசெலுத்தி தெளிவு பெற முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில்

ஒரு ஏழை தனது கவிதையில் பாடிய நிலை தான் சமூகத்தில் பரவலாக இருக்கும்..

'நோன்பு பெருநாளன்று கிடைத்த பித்ரா அரிசை வைத்துக்கொண்டு காத்திருக்கிறோம்,ஹஜ்ஜூப் பெருநாளன்று குர்பான் இறைச்சி வந்துசேரும்வரை' அரிசியுடன் இறைச்சி கரி சமைத்து சாப்பிட.


தவறான பத்தவாக்களால் வீணாகிப் போகும் ஏழைகளின் சொத்துக்கள்.. தவறான பத்தவாக்களால் வீணாகிப் போகும் ஏழைகளின் சொத்துக்கள்.. Reviewed by Madawala News on 7/08/2016 06:37:00 PM Rating: 5