Free Space

அம்பாறை மேல் நீதிமன்றத்தின் கணக்காளராக ஹாரூன் நியமனம்...

 

(சுலைமான் றாபி)  

அம்பாறை  மேல்  நீதிமன்றத்தின் கணக்காளராக நிந்தவூ ர் 11 ம் பிரிவைச் சேர்ந்த சரிபு முஹம்மது ஹாறூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2013ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அரச கணக்காளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட  திறந்த இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தற்பொழுது அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கணக்காளராக  நியமனம் செய்யப்பட்டு அம்பாறை மேல் நீதிமன்றத்தின் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தனது இளமானிப்பட்டத்தினை வியாபார முகாமைத்துவத்தில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டத்தினை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்திலும், கணக்கியல் தொழிநுட்பவியலாளர் பட்டத்தினை இலங்கை கணக்கியல் தொழிநுட்பவியலாளர் நிறுவகத்திலும் நிறைவு செய்துள்ளார். 

இவர், நிந்தவூரைச் சேர்ந்த முஹம்மது இப்றாலெப்பை சரிபு, அலியார் ஆசியா உம்மா  ஆகியோரின் ஆறாவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பாறை மேல் நீதிமன்றத்தின் கணக்காளராக ஹாரூன் நியமனம்... அம்பாறை  மேல்  நீதிமன்றத்தின் கணக்காளராக ஹாரூன் நியமனம்... Reviewed by Madawala News on 7/26/2016 08:18:00 PM Rating: 5