Accaddemy

மறைந்த தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் அவர் பிரதமராக இருந்திருப்பார் - பஷீர்


மறைந்த தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் நாட்டின் பிரதமராக வந்திருப்பார் என்று தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்.

இவர் கட்சி ஆதரவாளர்களை கொழும்பு இல்லத்தில் சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இந்நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்துக்கு வித்திட்டவர் மறைந்த தலைவர் அஷ்ரப். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வலிமை முஸ்லிம்களுக்கு உள்ளது என்று நிரூபித்தார். 

சிங்கள பௌத்த கடுமை போக்காளரான சோபித தேரருடன் நேரடி தொலைக்காட்சி வாதத்தில் ஈடுபட்டு இவர் வெற்றி ஈட்டிய தருணம் அது. இதனால் 2000 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அஷ்ரப் பிரதமராக வந்து விடுவார் என்று அப்போது அச்சப்பட்டவர்கள் இருந்தனர். இவர் மூலமாக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியையும், வளர்ச்சியையும் பொறுக்க முடியாதவர்கள் இருந்தனர்.

இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சியில் உள்ள ஒருவர் மீதும் நம்பிக்கை கிடையாது. இதற்கு உதாரணமாக நான்  நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.

2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது கிழக்கு மாகாண தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகு தாவூத் ஆகிய நான் ஆகியோர் போட்டியிடுவதென தீர்மானம் எடுக்கின்ற அதியுயர் உச்சபீட கூட்டம் குளோபல் ரவர் ஹோட்டலில் இடம்பெற்றது.

கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றியபோது மனைவி, மனைவியின் அப்பா ஆகியோருடன் கலந்தாலோசித்தபோது இந்தயோசனையை முன்வைத்தனர் என்கிற பீடிகையோடு பேச தொடங்கினார் ஹக்கீம். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வெகுண்டு எழுந்தார் உதவி தலைவர் நைனா ராவுத்தர் முஹமது. கட்சியின் தீர்மானங்களை வீட்டில் மனைவி, மாமா ஆகியோருடன் கலந்தாலோசித்தா எடுக்கின்றீர்கள்? என்று கோபத்துடன் கேட்டார். இதை அடுத்துத்தான் தலைவர் நிதானம் அடைந்தார். நைனா ராவுத்தர் முஹமது இன்றும் உயிருடன் உள்ளார் அல்லவா? இவரை கேட்டு உண்மையை உறுதிப்படுத்தலாம்.

மறைந்த தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் அவர் பிரதமராக இருந்திருப்பார் - பஷீர் மறைந்த தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் அவர் பிரதமராக இருந்திருப்பார் - பஷீர் Reviewed by Madawala News on 7/21/2016 11:09:00 PM Rating: 5