Ad Space avaiable

தன்னை எளியாமையான ஒருவராக எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்ரி ...


ஜனாதிபதி மைத்ரி தன்னை மிக எளிமையான ஒருவர் என காட்டிக்கொள்வதில் அதிக பிரியம் கொண்டவர் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்  கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு கிராம சேவகராக தனது தொழில் வாழ்க்கையை துவங்கிய அவர் அந்த விடயத்தை அடிக்கடி பொது மேடைகளில் ஞாபகமூட்டுவது வழக்கம்.

அது தவிர ஜனாதிபதியான பிறகும் வாழை இலையில் மனைவி சாப்பாடு,பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி ஜொக்கிங் செல்வது,டிபண்டர் பாதுகாப்பு வாகனங்களில் சாதாரண ஒருவர் போல செல்வது, விமானங்களில் சாதாரண பயணியாக செல்வது என ஏராளமான உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.

அவர் கலந்துகொள்ளும் அரசியல் கலந்துரையாடல்களில் கூட தனது எளிமைக்கு ஒரு சம்பவம் என கூறுவதுவதையும் வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று கண்டியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் முன்னதாக தான் சுகாதார அமைச்சராக இருந்த போது தனக்கு உயிர் அச்சுருத்தல் இருந்ததாகவும் தனக்கு 75 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறிய அவர், ஒருமுறை ஹலாவத்தை சென்றுவரும் போது தனது பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட நிறுத்தியதாகவும் தான் அங்கிருந்து இண்டர்சிட்டி பஸ் ஏறி கொழும்புக்கு தனியாக வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமாப ஜனாதிபதி மாளிகையில் குடியேறாத எமது ஜனாதிபதி கொழும்பில் இரு வீடுகளை ஒன்றாக இணைத்து (இரண்டு வீடுகளை இணைத்து கட்டுன் செலவு 21 கோடி) ஒரு வீடாக பாவனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


தன்னை எளியாமையான ஒருவராக எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்ரி ... தன்னை எளியாமையான ஒருவராக எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்ரி ... Reviewed by Madawala News on 7/19/2016 08:17:00 AM Rating: 5