Free Space

பங்களாதேஷ் தாக்குதல் ஒரு முன்னோட்டம் மாத்திரமே ! ஐஸ் மிரட்டல் வீடியோயை வெளியிட்டது


டாக்காவில் உள்ள பிரபல ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாத  தாக்குதல் இடம்பெற்றது.

இந்த தாக்குதலில் 20பிணையக்கைதிகள்  ,இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டான் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத  அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்  தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், சமீபத்தில் டாக்காவில் நடந்த தாக்குதல் ஒரு சிறிய ஆரம்பம் தான் என்றும், வருங்காலத்தில் நடக்கப் போகும் தாக்குதல்களுக்கான சிறிய முன்னோட்டம் என்றும் தெரிவித்துள்ளது. 

அந்த விடியோ சிரியாவில் பதிவு செய்யப்பட்டள்ளதாக  தகவல் மேலும் அந்த வீடியோவில் தோன்றும் நபர் வங்காளம் மற்றும் ஆங்கில மொழியில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 “நாங்கள் வெற்றி பெறும் வரையில் (ஐ.எஸ்.) அல்லது நீங்கள் தோல்வி அடையும் வரை (வங்காளதேசம்) திரும்பத் திரும்ப தாக்குதல் நடத்தப்படும்  என்று அந்த வீடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் தாக்குதல் ஒரு முன்னோட்டம் மாத்திரமே ! ஐஸ் மிரட்டல் வீடியோயை வெளியிட்டது பங்களாதேஷ் தாக்குதல் ஒரு முன்னோட்டம் மாத்திரமே ! ஐஸ் மிரட்டல் வீடியோயை வெளியிட்டது Reviewed by Madawala News on 7/06/2016 07:46:00 PM Rating: 5