Thursday, July 21, 2016

முஸ்லிம் காங்கிரசிடம் கிழக்கு மண் தலைமை பதவி கேட்பது தகுமா?

Published by Madawala News on Thursday, July 21, 2016  | 


அஹமட் லெவ்வை நௌஷாட் - அக்கரைப்பற்று-

கிழக்கு மாகாணம் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்டது. இங்கு செறிந்துவாழும் முஸ்லீம்கள் தன்னகத்தே பெரு நிலத்தையும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காலாச்சார அடையாளத்தையும், தமக்கே உரித்தான பொருளாதார பண்புகளையும், ஆண்டாண்டு காலவாழ்வியல் முறைமைகளையும் கொண்டிருக்கின்றனர்.


இத்தன்மை கிழக்கு முஸ்லீம்களை இயல்பாகவே அரசியலாலடையாளப்படுத்தி தேசமாய் தலை நிமிர்த்திநிற்க வைத்திருக்கிறது. கிழக்கு முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக கொண்டுள்ள இப்பண்பு, தெற்கில் சிலம்பிக் கிடக்கும் முஸ்லீம்களிடமிருந்து 100 % வேறுபட்டிருக்கிறது. பின்வருமாறு இதனைவிளங்கிக் கொள்ளமுடியும்.

1. 90களில்வடக்கிலிருந்து 2 மணிநேரத்தில் புலிகளால் முஸ்லீம்கள் விரட்டப்பட்டனர். ஆனால் அதே நிகழ்ச்சி நிரலைகிழக்கில் புலிகளால் செயற்படுத்த முடியாமல் போனது. காரணம் ? கிழக்கு முஸ்லீம்களின் சனச்செறிவு, பெருநிலப்பரப்பு, ஒத்த கலாச்சாரம், பல் நூற்றாண்டு கால இருப்பியல் அநுபவம்.


இவற்றையெல்லாமுடைத்துக் கொண்டு, ஆயுதம் தரித்திருந்தாலும் புலிகளால் எதுவும் செய்ய இயலாதுபோனது. கிழக்கு முஸ்லீம்களின் அரசியல் பலம் புலிகளால் நன்கூணரப்பட்டிருந்தது.


2.பொதுபலசேனா, பேருவளை, களுத்துறை, தெகிவளை போன்ற பள்ளிகளை உடைத்து கல்லெறிந்து சேதப்படுத்தியது போல், அக்கரைப்பற்று, கல்முனை, காத்தாங்குடி பள்ளிகளை சேதப்படுத்த முடியாது. மேற்சொன்ன அதேகாரணம் பொதுபலசேனாவையும் தடுத்திருந்தது.


தப்பித்தவறி பொதுபலசேனா இங்கும் முயற்சித்திருந்தால், அவர்களது கைகள் கழுத்தில் கட்டப்பட்டூடல் கடலில் தஞ்சமடைந்திருக்கும்.

தெற்கு முஸ்லீம்களிடமிருந்து, கிழக்கு முஸ்லீம்கள் வேறுபடும் விதம், கிழக்கு முஸ்லீம்களின் அரசியல், ஆள் நிலபலம் மேலுள்ள உதாரணங்களிலிருந்து புரிந்திருக்கும்.


கிழக்கு முஸ்லீம்களின் அரசியல் தாகத்தை ஜீரணிக்க முடியாத புலிகள் 90களில் வடக்கிலிருந்து முஸ்லீம்களை விரட்டும் போது கூறியவார்த்தைகள் 'போ அஸ்ரப் உள்ள கிழக்கிற்கு' என்பது.......

இதேவார்த்தைகள், பொதுபலசேனா போன்ற சிங்கள பெருந் தேசியவாதிகளிடமிருந்து தெற்கு முஸ்லீம்களை நோக்கிவருவதற்கு முன், விரட்டுவதற்கு முன் தெற்கு முஸ்லீம்கள் செய்யவேண்டியவை.


1. சிங்கள தேசிய கட்சிகளிடம் நல்லபிப்பிராயத்தை வளர்த்துக் கொள்வது, அதனூடாகதமது முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகளை உண்டுபண்ணுவது.

2. மனோ கணேசன் தெற்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவது போல், சிங்கள சகோதரர்களையும் திருப்திப்படுத்தக்கூடியதெற்கு முஸ்லீம் அரசியல் அமைப்பை உண்டுபண்ணி அதனூடாக அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது. அல்லது,

3. முஸ்லீம் காங்கிரஸ் (கிழக்கு), முஸ்லீம் காங்கிரஸ் (தெற்கு) எனபிரிந்து செயற்படுவது. மு.கா தெற்கு சிங்களமக்களை திருப்திபடுத்தக்கூடிய, அந்த மக்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய விசேடகொள்கைத் திட்டங்களை கொண்டிருப்பது.

தெற்கு மு.கா விற்குவேண்டுமானால் ஹக்கீம் தொடர்ந்தும் தலைவராக இருப்பது.

வடக்கு, தெற்கு முஸ்லீம்களுக்கு பாதிப்பு என்பதற்காக கிழக்கு முஸ்லீம்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை ஒருக்காலும் விட்டுக் கொடுக்கமுடியாது. அது மொத்த இலங்கை முஸ்லீம்களையும் நாடோடிகளாக்கிவிடும்.

தற்றுணிவோடு கிழக்கு முஸ்லீம்கள் தமக்கே உரித்தான உரிமைகளை பெற்றதன் பிற்பாடு, தெற்கு முஸ்லீம்களின் பாதுகாப்பு தொடர்பாக, கிழக்கு முஸ்லீம்களின் அரசியல் பலத்தை சிங்கள தேசிய அரசுகளுடன் பேரம்பேசளின் ஊடாகபெற்றுக் கொள்ள முடியும்.

கிழக்கு முஸ்லீம்களுடைய ஆள் நிலபுல அமையம் அரசியல் ரீதியாக கோலோச்சும் பண்புகளைகொண்டது. அல்லது வேண்டிநிற்கின்றது. இந்தபின் புலங்களை கொண்டதனாலேயே 1987 களில் தமிழ் பாசிசத்திற்கு எதிராகமக்கள் எழுச்சியாய் கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் வடிவமைக்கப்பட்டது.

பெரும்பான்மை பௌத்த, சிங்களமக்களோடு இரண்டறக் கலந்தமிகச் சிறுபாண்மையான முஸ்லீம்கள் வேறு அரசியல் தேவைகளையும், பரிமாணங்களையும் கொண்டவர்கள். சிங்களவாக்குகளையும், சிங்களவாதத்தையும் அனுசரித்துபோகவேண்டிய எதார்த்தங்களை கொண்டவர்கள், தெற்கு முஸ்லீம் அரசியல் தலைவர்கள். இவர்களினால் தேச அடையாளத்தை கொண்ட கிழக்கு முஸ்லீம்களின் அரசியல் அபிலாசைகளை ஒருக்காலும் வென்றுதரமுடியாது.

கிழக்கில் பேரினவாதத்தை வெளிப்படியாகசாடிப் போராடிப் பெற வேண்டிய முஸ்லீம்களின் உரிமைகள் ஏராளம் ஏராளம்.

சிங்கள பிரதேசங்களில் பெரும் வியாபாரங்களை வாழ்வாதாரமாக கொண்ட நம் தெற்கு முஸ்லீம் சமூகம் சிங்கள மக்களை சிங்கள தலைமைகளை பகைத்துக் கொண்டு அரசியல் நடாத்த விளைவது அறிவுடமையாகாது.


இந்த அரசியல் அடிப்படை நேர்மையாக விளங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது, கிழக்கு தெற்கு முஸ்லீம்கள் இரு சாராரும் பாதுகாப்பாகவும் அரசியல் உரிமைகளோடும் வாழ வழிகிடைக்கும்.

இவ்விருசாராரும் நன்மைபெறக் கூடிய அரசியல் எடுப்புக்கள், இராஜதந்திரங்கள் இருக்கும் போது, கிழக்கு முஸ்லீம்களின் அரசியல் உரிமைகளைவிற்று, தெற்கு முஸ்லீம் தலைவர்கள் வயிறுவளர்க்க இடம் கொடுக்க முடியாது.

ஹக்கீம் 'காலக்காரனிடம் காலயை மரியாதையுடன் ஒப்படைக்க வேண்டும்'கிழக்கு மக்களால் தமது சொந்தஅரசியல் தேவைக்கூருவாக்கிய முஸ்லீம் காங்கிரஸை கிழக்குமக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

குறிப்பு : இந்த ஒப்படைப்பு'பருவமாத்தி பொக்களமாக்கின சீலம்' இல்லாமல் கிழக்கின் எழுச்சி இப்பொழுதிருந்தே தன்னை சீர்படுத்தி சுய விமர்சனம் செய்து கொணடிருக்க வேண்டும்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top