Yahya

திட்டமிட்ட குடியேற்றங்கள்; எல்லை வட்டாரப் பிரிப்புக்களால் திருமலை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது...


திரு­கோ­ண­ம­லையில் உண்­டாக்­கப்­பட்ட திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள், அர­சாங்­கங்­களின் நய­வஞ்­ச­க­மான எல்லை மற்றும் வட்­டாரப் பிரிப்­பு­க­ளா­லேயே சிறு­பான்மை சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் மாவட்­டத்தில் குறைந்து காணப்­ப­டு­கி­றது " என்று திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லா மஃறூப் தெரிவித்தார்.


அசோகா பீரிஸ் தலை­மை­யி­லான உள்­ளூ­ராட்சி எல்லை மீளாய்வுக் குழு கடந்த சனிக்­கி­ழமை திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்­துக்கு வருகை தந்து கட்சிப் பிர­மு­கர்கள், பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள், பொது அமைப்­பு­க­ளிடம் கருத்­துக்­களைக் கேட்டு பதிவு செய்து கொண்ட போதே மஃறூப் எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார்.


அவர் தொடர்ந்தும் ஆணைக்­குழு முன் கருத்­தையும் ஆலோ­ச­னை­யையும் முன்­வைத்­த­போது கூறி­ய­தா­வது;

ஆளும் தரப்பும் அரச யந்­தி­ரமும் பெரும்­பான்மை சமூ­கத்தின் நலன் மீது அக்­கறை கொள்­கி­றதே தவிர இரு சிறு­பான்மை சமூ­கத்தின் நலன் மீது கரி­சனை காட்­டு­வ­தில்லை. உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 1921 ஆம் ஆண்டு 53 வீத­மாக தமிழ் மக்­களும் 39 வீத­மாக முஸ்லிம் மக்­களும் 4 வீத­மாக சிங்­கள சமூ­கமும் வாழ்ந்­துள்­ளன.


1945 ஆம் ஆண்­டுக்குப் பின் இந்­நி­லை­மைகள் மாறு­பட்ட நிலையில் 38 வீத தமிழ் மக்­க­ளா­கவும் 29 வீத முஸ்லிம் மக்கள் 27 வீத சிங்­கள மக்கள் என மாற்றம் அடைந்­து­விட்­டது. 1947 ஆம் ஆண்டு முத­லா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின் குறிப்­பாக சுதந்­தி­ரத்­துக்குப் பின் தமிழ் மக்கள் இடம்­பெ­யர ஆரம்­பித்­தனர். தேசி­ய­த்தின் ஏற்­பட்ட திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் கார­ண­மா­கவும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள இன விகி­தா­சார முறை மாறு­பட்­டது. 1947 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்டம் திரு­மலை, மூதூர் என்ற இரு தேர்தல் தொகு­தி­களைக் கொண்­ட­தா­கவே காணப்­பட்­டது. இவ்­விரு தேர்தல் தொகு­தி­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் போட்­டி­யிட்­டாலும் சிங்­கள மக்­களும் வாக்­க­ளித்­துள்­ளனர் . இலங்­கையின் முத­லா­வது தேர்­தலின் போது திரு­மலைத் தொகு­தியில் சு. சிவ­பா­லனும் மூதூர் தொகு­தியில் அபூ­பக்­கரும் தெரிவு செய்­யப்­பட்­ட­போதும் மூன்­றா­வது நிலையில் முஹம்­மது அலி வந்­தாலும் சிறு­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் தான் வந்­தார்கள். 


1952, 1956, 1960 ஜூலை, மார்ச் தேர்­தல்­க­ளிலும் இதே நிலையே காணப்­பட்­டது. பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் மூன்றாம் நான்காம் நிலைக்கே தள்­ளப்­பட்­டார்கள். எனவே 1947 ஆம் ஆண்டு தொட்டு 1960 வரை நடை­பெற்ற தேர்­தல்­களில் எல்லாம் சிறு­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த ஏகாம்­பரம், முஹம்மட் அலி, ஏ.எல் அப்துல் மஜீது போன்­ற­வர்கள் மூதூரில் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். 1965 ஆம் ஆண்டு தேர்­தலில் மூதூர் இரட்டைத் தொகு­தியில் முஹம்மட் அலி, ஏ.எல்.அப்துல் மஜீது தெரிவு செய்­யப்­பட எச்.டி.சி.லீலா ரட்ணா மூன்­றா­வ­தாக வந்தார்.


அர­சாங்­கத்தின் நோக்கம் இக்­காலப் பகு­தியில் நிறை­வே­ற­வில்லை. 1976 எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்ட வேளையில் ஏ.எல். அப்துல் மஜீது மாவட்ட அர­சியல் அதி­கா­ரி­யா­கவும் எம்.ஈ.எச். மஃறூப் மாவட்ட ஐ.தே. கட்சி அமைப்­பா­ள­ராக இருந்தனர். இவர்­க­ளாலே ஒன்றும் செய்ய முடி­யாத நிலை­யி­லேயே 1977 சேரு­வில தொகுதி புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டது.


1800 சதுர மைல்­களைக் கொண்ட மூதூர் தொகு­தியும் 900 சதுர மைல்­களைக்கொண்ட திரு­கோ­ண­மலைத் தொகு­தியும் எந்த எல்லை நிர்­ணய மாற்­றமும் 1947 ஆம் ஆண்டு தொட்டு 1976 வரை இடம்­பெ­ற­வில்லை. ஆனால், மாவட்ட அர­சியல் அதி­கா­ரி­யா­கவும் அமைப்­பா­ளர்­க­ளா­கவும் எம்­மவர் இருந்து கூட 1976 இல் பாரிய பின்­ன­டைவைக் கண்டோம். சேரு­வில என்ற புதிய தேர்தல் தொகுதி பெரும்­பான்மை சமூ­கத்­துக்­கென உரு­வாக்­கப்­பட்­டது. இந்­நி­லைமை உள்­ளூ­ராட்சி மன்ற எல்லைப் பிரிப்பில் வந்­து­வி­டக்­கூ­டாது.


1934 ஆம் ஆண்டு தொட்டு 1969 ஆம் ஆண்­டு­வரை உள்­ளூ­ராட்சி மன்ற அமைப்­பு­களில் பட்­டி­ன­சபை, நகர சபை, கிராம சபை­யென இருந்த வேளையில் கிண்­ணி­யாவும் மூதூரும் பட்­டின சபை­க­ளா­கவும் திரு­கோ­ண­மலை நகர சபை­யென இருந்த வேளையில் 1969 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 27 உள்­ளூ­ராட்சி சபைகள் காணப்­பட்­டன. இச்­ச­பை­க­ளி­லி­ருந்து 149, பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். 1969 முதல் 1994 ஆம் ஆண்டு வரை கூடி­ய­ளவு ஆணை­யா­ளர்­களே சபை­களை நிர்­வ­கித்து வந்­தார்கள்.


1994 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மாற்றம் நிகழ்ந்­த­போது திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 13 உள்­ளூ­ராட்சி சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. பத­வி­சி­றி­புர, சேரு­வில, கந்­தளாய் என்­பன பெரும்­பான்மை சமூ­கத்­துக்­கென்றே உரு­வாக்­கப்­பட்­டன.


41.77 வீதம் முஸ்­லிம் இருக்கும் நிலையில் இன விகி­தா­சாரம் பேணப்­ப­டாமல் 13 உள்­ளூ­ராட்சி அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டது. இதனால் நாம் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். உண்­மையில் இன விகி­தா­சாரம் பேணப்­பட்­டி­ருக்­கு­மாயின் முஸ்லிம் மக்­க­ளுக்கு 8 சபையும் தமிழ் மக்­க­ளுக்கு 5 சபை­களும் சிங்­கள மக்­க­ளுக்கு 3 சபை­யுமே அமைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் நடந்­தது வேறு.


2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்றில் கொண்­டு­வந்து 2013 ஆம் ஆண்டு வட்­டார முறையை கொண்­டு­வர முயற்­சித்த வேளையில் படு­மோ­ச­மான முறையில் பிரிக்­கப்­பட்டு மோச­மான நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.


1976 ஆம் ஆண்டு சேரு­வில தொகு­தியை உரு­வாக்­கும்­போது 1688 சதுர கி.மீ. சேரு­வி­லைக்கும் 538 சதுர கி.மீற்றர் திரு­கோ­ண­ம­லைக்கும் 398 ச. கி. மீற்றர் மூதூர் தொகு­தியும் வரும் வண்ணம் மிக மோச­மான முறையில் தேர்தல் தொகு­தியைப் பிரித்­தார்கள். இதனால் பாரிய குளங்கள், சீனித் தொழிற்­சாலை ஆகிய வளங்கள் சேரு­வில தொகு­திக்குள் கொண்­ட­வ­ரப்­பட்­டன. பத­வி­சி­றி­பு­ர­வி­லி­ருந்து செல்­வ­நகர் வரை­யுள்ள 1688 ச. கி. மீற்றர் கொண்ட சேரு­வில தொகுதி உரு­வாக்­கப்­பட்­டது.


தம்­ப­ல­காமம் பிர­தேச சபை உரு­வாக்­கப்­படும் வேளையில் கல்­மிட்­டி­யாவ, வடக்கு, தெற்கு நிலப்­ப­ரப்பு தம்­ப­ல­காமம் பிர­தே­சத்­துக்குள் இருந்­தாலும் தொகுதி ரீதி­யாக சேரு­விலத் தொகு­தி­யுடன் இணைக்­கப்­பட்­டது.


மூதூர் தொகு­திக்குள் இருந்த கப்­பல்­துறை, முத்­து­நகர், புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய கிரா­மங்கள் தம்­ப­ல­காமம் பிர­தேச சபைக்கும் மூதூர் தொகு­திக்கும் உரி­யவை. அது திரு­கோ­ண­மலைத் தொகு­திக்குள் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. இப்­படி மிக மோச­மான முறையில் எல்லை நிர்­ண­யங்கள் இடம்­பெற்ற கார­ணத்­தினால் பிர­தேச சபை­களை உரு­வாக்­கு­வ­திலும் பல கஷ்­டங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

முன்­னைய உள்­ளூ­ராட்சி அமைப்பில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 21 சபையும் 149 உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள். தற்­போ­தைய புதிய முறையில் 136 உறுப்­பி­னர்­களும் 39 போனஸ் உறுப்­பி­னர்­களும் வர­வுள்­ளனர். இது ஏற்­பு­டைத்­தா­ன­தல்ல. இதற்குப் பதி­லாக 188 உறுப்­பி­னர்கள் நேரடித் தெரி­விலும் 51 உறுப்­பி­னர்கள் போனஸ் முறை­யிலும் மொத்­த­மாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ளூர் ஆட்சி அமைப்பின் சார்பில் 239 அங்­கத்­த­வர்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அர­சாங்­கமோ 136 வட்­டார முறை­யிலும் 39 போனஸ் முறை­யிலும் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென தீர்­மா­னித்­துள்­ளது.


இதற்கு பதி­லாக இன்­னு­மொரு ஆலோ­ச­னையை முன்­வைக்க விரும்­பு­கிறேன். 1969 ஆம் ஆண்டு மூதூர் தேர்தல் தொகு­தியில் கிளி­வெட்டி, மல்­லி­கைத்­தீவு, சம்பூர், தோப்பூர், கட்­டைப்­ப­றிச்சான், மூதூர், பட்­டி­ன­ச­பை­யென ஆறு சபைகள் இருந்­துள்­ளன. 6 சபை­க­ளிலும் 40 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். பின்­னாளில் வெருகல், சேரு­வில என்ற பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. எனவே நாலு சபை­க­ளுக்குப் பதி­லாக மூன்று சபைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். தோப்­பூ­ருக்கு ஒரு பிர­தேச சபை கிளி­வெட்டி, மல்­லிகைத் தீவு, கட்­டைப்­ப­றிச்சான், சம்பூர் உள்­ள­டங்­கிய சம்பூர் பிர­தேச சபை, மூதூர் நகர சபை­யென மூன்று உள்­ளூ­ராட்சி அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.


ஏலவே 40 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்ட மூதூரில் தற்­பொ­ழுது 13 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்யும் உரி­மையே வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றது. இப்­பி­ர­தேச சபையின் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 21 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். இம்­முறை சாத்­தி­ய­மில்­லை­யாயின் நான் ஏலவே குறிப்­பிட்­டது போல் மூன்று பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­ப­டு­வது நன்று. இதன் மூலம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காக்க முடியும். இது போன்றே கிண்­ணியாப் பிர­தே­சத்தில் ஏலவே ஆலங்­கேணி கிராம சபை, குறிஞ்­சாககேணி கிராம சபை, கிண்­ணியா பட்­டின சபை­யென மூன்று உள்­ளூ­ராட்சி அமைப்­புகள் இருந்­தன 1969 வரை. ஆனால் தற்­பொ­ழுது கிண்­ணியா நகர சபை, பிர­தேச சபை­யென இரு சபைகள் உரு­வாக்­கப்­பட்­டிக்­கின்­றன. இவ்­விரு சபைகளிலும் மிகக் குறைந்த பிரதிநிதித்துவம். இதேவேளை,மொறவேவ பிரதேச சபையை எடுத்துக் கொள்வோமாயின் 5836 வாக்காளர்களுக்கு 10 பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிண்ணியா நகர சபையில் 23393 வாக்காளர்களுக்கு குறைந்தளவிலான உறுப்பினர்களே தெரிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, சுமார் 8000 வாக்காளர் தொகை கொண்ட பதவிசிறிபுரவுக்கு 10 உறுப்பினர்களும் 8650 வாக்காளர் கொண்ட மொறவேவ பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் வேளையில், கிண்ணியா பிரதேச சபையில் 17496 வாக்காளர் இருந்துங்கூட 8 உறுப்பினர்களையே இவர்கள் தெரிவு செய்ய முடியும். 


இது பாரிய இழப்பாகும். ஆகவே இந்த ஏற்ற தாழ்வுகளை இல்லாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க தங்கள் ஆணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டுமென அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

திட்டமிட்ட குடியேற்றங்கள்; எல்லை வட்டாரப் பிரிப்புக்களால் திருமலை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது... திட்டமிட்ட குடியேற்றங்கள்; எல்லை வட்டாரப் பிரிப்புக்களால் திருமலை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது... Reviewed by Madawala News on 7/26/2016 01:52:00 PM Rating: 5