Thursday, July 21, 2016

பொதுபலசேனாவை தடைசெய்க கிழக்குமாகாண சபையில் ஏ.ஆர்.எம்.அன்வர் உரை

Published by Madawala News on Thursday, July 21, 2016  | 


-றபாய்தீன் பாபு -
                                                            அண்மைக்காலமாக பொதுபலசேனா அமைப்பினால் முஸ்லிம்களின் கலாச்சார வழிபாட்டுத்தளங்கள் புனித அல்குர்ஆன் அவ்வாறே எம்மைப்படைத்து ஆழ்கின்ற அல்லாஹ்வையம் அவனது தூதரான கண்மணி முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவமதிக்கும்வகையில் அந்த அமைப்பின் செயலாளர் நடந்து கொள்வது இலங்கையில் வாழும் முஸ்லிம்களை  ஏனய சமுகத்தவரோடு இனரீதியாக கலவரத்தைத் துர்ண்டுகின்ற செயற்பாடு மட்டுமன்றி  இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என வியாளக்கிழமை  திருகோணமலை கிழக்கு மாகாண பேரவைச்செயலகத்தில் தவிசாளர் கலப்பத்தி தலைமையில் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின் போது தனிநபர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் சதந்திரத்திற்கும் இறைமைக்கும்பாரிய பங்களிப்பு வழங்கியவர்கள் ;முஸ்லிம்கள் எந்த  ஒரு சந்தர்ப்பத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததோ துண்டாடவோ முயற்சி செய்தது கிடையாது. 

இந்த நாட்டிலே வாழுகின்ற ஒரு கோடியே ஐம்பது இலச்சம் சிங்கள மக்களில் வெறும் இருபத்திமுவாயிரம் மக்கள் மாத்திரம்தான்  கடந்த பொதுத்தேர்தலில் பொதுபலசேன கட்சியை அவர்களை ஆதரித்தார்கள். பெரும்பான்மை மக்கள் இவ்வமைப்பை இனவாதிகளாகப் பார்த்துள்ளார்கள்.

நல்லாட்சியிலே ஜனாதிபதி அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பது முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம்கள் பாடம்கற்பித்ததைப் போல் அதிமேதகு ஜனாதிபதிக்கும் பாடம்கற்பிக்க வேண்டி வரும் முஸ்லிம்களுடைய உரிமைப்பிரச்சினையிலே அரசாங்கம் கவனத்தில் கொண்டு இதனை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்எனவே நோர்வே நாட்டின் பின்னனியில் இருந்து கொண்டு செயல்படும் பொதுபல சேன அமைப்பை உடன் தடைசெய்ய வேண்டும் என இவ்வியரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

மாகாண சபை உறுப்பினரான எம்.எஸ்.உதுமான்லெவ்வை அவர்கள் ஜனாதிபதி அவர்களையும்.பிரதம மந்தரி அவர்களையும் கோரும் பொதுபலசேனாவுக்கெதிரான மற்றுமொரு தனிநபர் பிரேரனையொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

இவ்விவாதத்தில் அவர்உரையாற்றுகையில்  நமது நாட்டில் அண்மைக்காலமாக பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்களுக்கெதிரான  சில இனவாத சிந்தனை கொண்ட  அமைப்புகளும்  முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளும் இனவாத பேச்சுக்களையும்  செயற்பாடுகளையும்  கட்டுப்டுத்தி இவ்வினவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மெற்கொள்ள வேண்டும் .பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் சமயத் தலைவராக செயற்பட்டு இன ஒற்றுமைகளை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர் ஒருவர் இன்னொரு சமயத்தைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு இலங்கையில் வாழும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிடும்.

எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து நாம்அணைவரும் கவலை கொள்ள வேண்டும்
இப்பிரேரணையை ஆதரித்து சட்டத்தரனிகளான ஆரிப்சம்சுதீன் ஜெயனுதீன்லாஹிர் சுகாதார அமைச்சர் நசீர்அஹமட் அமீன் றசாக் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்திகலப்பத்தி மஞ்சு ஆகியோர் உரையாற்றினர்.   

முதலமைச்சர் நசிர்அஹமட உரையாற்றுகையில் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரனம் கிழக்கு மாகாண சபையாகும்.கடந்த ரமளான் மாதத்தில் என்றுமில்லாதவாறு நாட்டில ;அமைதி ஏட்பட்டது முஸ்லிம்கள் சுதந்திரமாக தங்கள் மதக்கடமைகளைச்  செய்தார்கள்.ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இதன்போது நன்றி கூறினார் .இப்பிரேரனை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் இப்பிரேரணை பற்றிஅறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top