Free Space

சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால்கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைப்பு!


(ஹாசிப் யாஸீன்அகமட் எஸ்முகைதீன்)

கல்முனைப் பிராந்தியத்தில் கடினபந்து கிரிக்கெட்விளையாட்டின் தாய்க் கழகமான சாய்ந்தமருதுபிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வதுஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்லம்பிக் மார்ட் நிறுவனத்தின் முழு அனுசரணையில்ரீ-10 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்ஆரம்ப நிகழ்வு இன்று (16) சனிக்கிழமைசாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில்இடம்பெற்றது.

பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்வங்கியலாளர் எம்.எம்.மசூத் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரும்ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டிகளைவைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்.எல்.எம்.சலீம்அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின்முகாமைத்துவப் பணிப்பாளர் .ஆர்..அஸ்லம்றியாஜ்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின்இணைப்புச் செயலாளர் நௌபர் பாவாஉள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப போட்டியில் சம்மாந்துறை முபோவிளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனைபிறைட் பியுச்ச விளையாட்டுக் கழகமும் கல்முனைறினோன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்துசம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக்  கழகமும்மோதியது

இதில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகம்17 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் மற்றையபோட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் 4 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.

சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால்கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைப்பு! சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால்கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைப்பு!   Reviewed by Madawala News on 7/17/2016 12:35:00 AM Rating: 5