Free Space

(வீடியோ இணைப்பு) நாமலை கைது செய்ததற்கு எதிர்ப்பாக பௌத்த பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்.



ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை தங்காலை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், பௌத்த பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணம் தங்காலை கால்ட்டன் வீட்டுக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, தங்காலை பஸ் தரிப்பிடம் வரை சென்று, அங்கு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பொலிஸார் தலையிட்டு நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்

(வீடியோ இணைப்பு) நாமலை கைது செய்ததற்கு எதிர்ப்பாக பௌத்த பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம். (வீடியோ இணைப்பு) நாமலை கைது செய்ததற்கு எதிர்ப்பாக பௌத்த பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 7/17/2016 11:24:00 PM Rating: 5