Accaddemy

அர்ஜுன் மஹேந்திரனுக்கு மீண்டும் உயர் பதவி !!


இலங்கை மத்திய வங்கி முறி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் அரசாங்கத்தின்  முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் பதவி ஒன்று வழங்கப்படும் என தெரிகிறது.

பிரதமர் ரனிலின் ரோயல் கல்லூரி நண்பர் சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மஹோந்திரன் மத்திய வங்கி ஆளுநராக இருந்த போது முறி மோசடி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து அவர் பதவி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே கைச்சாத்திடப்படவுள்ள எக்டா மற்றும் அரசின் ஒரு மில்லியன் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

நேற்று இலங்கை வந்துள்ள அர்ஜுன் மஹோந்திரன் நாளை அலறி மாளிகையில் முக்கியமான முதலீட்டார்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் மஹேந்திரனுக்கு மீண்டும் உயர் பதவி !! அர்ஜுன் மஹேந்திரனுக்கு மீண்டும் உயர் பதவி !! Reviewed by Madawala News on 7/20/2016 10:17:00 AM Rating: 5