Kidny

Kidny

சமாதான புறாவை கொலை செய்து விட்டீர்கள்!


சன்க ரம்புக்வெல்ல -சட்ட பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
 
எல்லா நாட்களிலும் காலைப் பொழுதில் சூரியன் உதிக்கின்றது. மாலையாகும்போது சூரியன் மறைந்து போகின்றது. நாம் உயிர் வாழ்வதற்காக இந்த சூரியனின் கீழ் பல்வேறு விடயங்களை செய்கிறோம். என்ன செய்தேனும் நாம் உயிர் வாழ்கிறோம். சிலபோது நாம் வாழ்வை சுவைக்கிறோம். 

இன்னும் சிலபோது வாழ்வில் துன்பப்படுகிறோம். இறுதியில் நாம் நம்மை அறியாமலே மரணித்துப் போகிறோம். வாழ்க்கை குறித்து என்னால் வழங்க முடியுமான மிக எளிமையான வரைவிலக்கணம் இதுதான்.
 
சமீபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பெரும் குழப்பமொன்று ஏற்பட்டதாம். சிறுபான்மையான தெற்கு மாணவர்களுக்கு பெரும்பான்மையான வடக்கு மாணவர்கள் துரத்தி துரத்தி அடித்தனராம். தெற்கு இனவாதிகளைப் போன்றுஇ வடக்கு இனவாதிகளுக்கும் இந்த சம்பவம் நிறைய பேசிக் கொள்வதற்கான ஒரு சம்பவமாக மாறியுள்ளதாம். எவ்வாறாயினும் இரத்தம் தோய்ந்த தெற்கு மாணவர்கள் பொலிஸ் வாகனங்கள் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதை பார்த்த தெற்கு மக்களுக்குஇ ஏலவே மறந்து போன சில விடயங்கள் நினைவுக்கு வரத் தொடங்கியுள்ளன.
 
நான் ஒரு எல்லைக் கிராமத்தில் பிறந்தவன். 96இ 97 காலப் பகுதியில் போர் மிகவும் உக்கிரமடைந்திருந்தது பற்றி எனக்கு ஒரு மெல்லியதான நினைவு உள்ளது. ஏன் யுத்தம் நடைபெறுகிறது என்பது ஒருபுறமிருக்க யுத்தம் என்றால் என்னவென்று கூட அறியாத எனக்கு யுத்த வாகனங்கள் எமது வீட்டருகால் செல்லும்போது சுவாசிப்பதற்கு கூட கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில் சரியாக மாலை 6 மணி ஆகும்போதே தாய்மார் வீட்டு விளக்குகளை அனைத்து விடுவார்கள்.
 
நாம் அனைவரும் காடுகளில் ஒழிந்து கொள்வோம். ஏனெனில்இ அந்த நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் எமது அயல் சிங்கள கிராமத்தை ஒரே இரவில் முழுமையாக துவம்சம் செய்திருந்தனர். இந்த சம்பவம் குறித்த அச்சத்தால் இரவு நேரங்களில் நாம் காடுகளில் சரணடைவோம். மறுநாள் காலையில் வீடு வருவோம். அந்தப் பொழுதுகளில 'அப்பா! ஏன் அவர்கள் எம்மை கொல்ல வருகிறார்கள்?' என்று தந்தையிடம் கேட்டபோதும்இ தந்தை ஒருபோதும் எனக்கு பதிலளித்ததில்லை. சொல்வதற்கு எந்தவொரு பதிலும் அவரிடம் இருக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
 
அந்தப் பொழுதுகளில் நாம் தேசிய தொலைக்காட்சியைதான் பார்ப்போம். சரியாக மாலை 6 மணி செய்தி ஒளிபரப்பபடுவதற்கு முன்னர்இ நிரோஷா விராஜினி பாடும்இ வெண்புறாவே பாடல் வீடியோவுடனேயே ஒலிபரப்பப்படும். யுத்தம் குறித்த அச்சம் இருமடங்கு மும்மடங்காக பெருகிஇ அதனை உணர்ந்த எனக்கு இந்தப் பாடலை செவிமடுக்கும் ஒவ்வொரு தடவையும் சொல்லிக் கொள்ள முடியாததொரு வேதனை உள்ளத்தில் உருவாகுவதை என்னால் உணர முடிகிறது. இது என்ன மாதிரியான வேதனை என்று நான் அறிந்திராதபோதும்இ இது நான் இழைக்காத குற்றமொன்றுக்காக அனுபவிக்கும் வேதனை என்று மட்டும் நான் அறிந்திருந்தேன்.
 
இந்த வேதனையை தெற்கு எல்லைக் கிராமமொன்றில் வாழ்ந்த நான் மட்டுமன்றி வடக்கு கிராமங்களில் வாழ்ந்த அப்பாவின் தமிழ் மக்களுக்கும் உணர்ந்தனர். இந்த வேதனையில் வித்தியாசங்கள் இருக்க முடியாது. ஏனெனில் நாம் இழைக்காத குற்றமொன்றுக்காகவே நாம் தண்டை அனுபவித்தோம்.
 
தெற்கு அரசியல்வாதிகள் யுத்தத்தை விற்று பிழைப்பு நடத்தியபோதுஇ வடக்கின் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிளிநொச்சியில் இன்பம் அனுபவித்து வந்தார். தெற்கு அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஒக்ஸ்போர்ட் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகங்களில் படித்தபோது சார்ல்ஸ் அந்தோனிக்களும் தொஹாரா பிரபாகரன்களும் வெளிநாடுகளில் நன்கு படித்தனர்.
 
ஆனால் உன்னையும் என்னையும் போன்ற அப்பாவிப் பெற்றோரின் பிள்ளைகள் அவர்களின் தேவைகளுக்காக மண் நிறமான நிலத்தை இரத்தம் வடித்து செந்நிறமாக்கும் வரை இரத்தம் சிந்திக்கொன்டோம். அரன்தலாவையில் பிக்குகளை கொத்தாக கொன்றனர். ஜய ஸ்ரீ மஹா போதியின் முன்னால் நிராயுதபாணி சிவில் மக்களை பச்சை பச்சையாக கொன்றனர். கெபிதிகொல்லேவயிலும் கொல்லப்பட்டனர்.; வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரத்தம் காணும் ஆசையை நிறைவேற்றுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ. முயற்சித்தது. சில தமிழ் மக்கள் இவற்றைப் பார்த்து சந்தோசமடைந்தபோது மனிதாபிமானமுள்ள தமிழ் சமூகம் 'ஆண்டவனே!' என்று தலை முடிகளை விரித்து கதறி அழுதனர்.
 
தெற்கின் நிலை இப்படியாகி விட்டது என்பதால்இ வடக்கின் நிலை இதனையும் விட வித்தியாசமானது அல்ல என்று எனக்கு நன்கு தெரியும். இந்த யுத்தம் காணரமாக தமிழர்கள் இழைக்காத குற்றமொன்றுக்காக தாம் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் காணி பூமிகள் மட்டுமன்றி தமிழ் சமூகத்தின் உயிர்களும் இழக்கப்பட்டன.
 
தவறு எதுவாக இருந்தபோதும்இ அதனை சரிசெய்து கொள்வதற்கான காலம் இறுதியில் வந்தது. இரு தரப்பினரும் ஒருபோதும் மன்னித்துவிட முடியாத தவறொன்றை வரலாற்றில் ஏற்படுத்தி விட்டுஇ நிகழ்காலத்தை புதிதாக வரைவதற்கான சந்தர்ப்பம் எம் அனைவருக்கும் கிடைத்தது.
 
நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்த வந்த ஒரே மாணவன் எனது நல்ல நண்பனாகினான். நான் எனது நண்பனின் வீட்டுக்குப் போனபோது அந்த நண்பனின் பெற்றோர் அவர்களது பிள்ளை போன்று என்னைக் கவனித்தனர். அந்த நண்பன் எம் வீட்டுக்கும் வந்தான். நாம் சிங்களவரா? தமிழரா? என்ற பிரச்சினை எம் இருவருக்கும் இருந்ததில்லை.
 
இது வரையிலும் தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நாம் பல்கலைக்கழகத்தில் கையை உயர்த்தியதேயில்லை. ஏனை பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் உள்ளது. அரன்தலாவையில் பிக்குகள் கொல்லபடும்போதும் கெபிதிகொல்லேவயில் மக்கள் கொல்லப்படும்போதும் யாழ்ப்பாணத்தில் மக்கள் கொல்லப்படும்போதும்இ நாம் சகோதரத்துவத்தால் இணைந்தோம். 'இது என்ன சாபமடா!' என்று நம்மை நாமே சபித்துக் கொண்டோம்.
 
இவ்வாறான உணர்வோடு தெற்கை சேர்ந்த நாம் நடந்து கொள்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நீங்கள்இ எமது மக்களுக்கு துரத்தி துரத்தி அடிப்பதை நாம் கண்ணீர் மல்க அவதானித்தோம். மாணவர்களுக்கு மாத்திரமன்றி மாணவிகளுக்கும் நீங்கள் அடித்தீர்கள். இந்த தாக்குதல்களில் மறைந்திருப்பது விக்னேஷ்வரன் விதைக்கும் இனவாத விதையேயன்றிஇ சம்பந்தன் விதைக்கின்ற நல்லிணக்கத்தின் விதை அல்ல என்று எமக்குத் தெரியும்.
 
எமது சிங்களவர்களை பாதுகாக்க உங்களால் முடியாமல் போய்விட்டது. இரத்தம் சிந்தும் அளவு அடிக்கும் நிலைக்கு நீங்கள் போனீர்கள். இனவாத மரபு இன்னும் உங்களது உடல்களில் அப்படியே உள்ளது என்பதை தெரிந்து கொண்டதன் பின்னர்இ இனவாத்துக்கு எதிராகஇ எம்மை போன்றோர் சிங்களவர்களுடனேயே மோதிக் கொள்வது குறித்து வெட்கமடைந்தோம். 'இப்போது உங்களுக்கு சந்தோசமா?' என்று எம் மக்கள் எம்மைப் பார்த்துக் கேட்கும்போதுஇ பதிலளிக்க முடியாது நாம் முகத்தை மறைத்துக் கொண்டோம்.
 
தெற்கில் மகிந்தவின் கொந்தராத்தை நிறைவேற்றும் இனவாதிகள் போன்று வடக்கில் விக்னேஷ்வரனின் இனவாத கொந்தராத்தை நிறைவேற்றுகின்ற நீங்கள்இ பல்கலைக்கழகங்களில் நாம் உருவாக்கியிருந்த சமாதானப் புறாவை கொலை செய்து விட்டீர்கள். ஆனாலும் நாம் உங்களோடு கோபம் கொள்வதில்லை. எம்மவர்களை நீங்கள் பாதுகாத்தாலும் பாதுகாக்காவிட்டாலும் உங்கள் ஆட்களை நாம் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வாக்களிக்கிறோம்.
 
அவர்கள் சிற்றுண்டிச்சாலையில் நம்மோடு ஒன்றாக உணவு உட்கொள்ளும் நண்பர்கள். உங்களைப் போன்று சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்ற பிரச்சினை எமக்கு அவர்களோடு இல்லை. அவர்களின் கலாசார நிகழ்வுகளுக்கு முதலில் செல்வது நாமே. எமது வெசாக் நிகழ்வில் 'சில்' பேணுவதற்கு முதலில் வருவதும் அவர்களே. இந்த பிணைப்பை விக்னேஷ்வரனுக்கோஇ மகிந்தவின் அபிமானிகளுக்கோஇ பொதுபலசேனாவுக்கோ அல்லது ஹக்கீமுக்கோஇ பதியுதீனுக்கோ இல்லாமலாக்க முடியாது.
 
தெற்கில் வாழும் நாம் தமிழ் சிங்கள புத்தாண்டை கடந்த வருடம் போன்று ஒன்றாகவே கொண்டாடுவோம். நாம் நூறு இருநூறு வருடங்கள் வாழ்வதில்லை. ஆனால் நீங்கள் இருநூறு வருடங்கள் வாழுங்கள். இன்னும் இன்னும் எம்மவர்களுக்கு அடித்து உங்களது பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் செய்து விட்டு பின்னே திரும்பிப் பாருங்கள். அப்போது நாம் அனைவரும் தோற்றுப் போய்விட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் புரியும். அந்த நேரம்இ எப்போதும் போல் நாம் தோற்றிருப்போம். உங்களுக்கு நிரந்தரமான வெற்றி!

நன்றி: நவமனி..
சமாதான புறாவை கொலை செய்து விட்டீர்கள்! சமாதான புறாவை கொலை செய்து விட்டீர்கள்! Reviewed by Madawala News on 7/19/2016 05:57:00 PM Rating: 5