tg travels

வங்கதேச தீவிரவாத தாக்குதலுடன் ஸாகிர் நாயக் தொடர்பு ! பாரதீய ஜனதாவின் விஷம பிரசாரம்


பிரபல மார்க்க போதகர் ஸாகிர் நாயக் ஐஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியுடன் அவரை தொடர்புபடுத்தி பாரதீய ஜனதா கட்சி விஷம பிரசாரத்தினை முன்னெடுத்துள்ளது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 22 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளை பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் ஊக்குவித்ததாக ஊடக செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும்,மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றியதையும் நிகழ்ச்சியில் பேசிய திக்விஜய் சிங் ஜாகிர் நாயக்கை "சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியிருந்தார்.

தற்போது இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் 

இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குடன் திக்விஜய் சிங் நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றுவது தொடர்பாக அவரை கடுமையாக பா.ஜ க சாடியுள்ளது.  

”பயங்கரவாத இயக்கத்துடனே காங்கிரஸ் கட்சியின் அனுதாபங்கள் அனைத்தும் இருக்கும். எனவே இது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இல்லை,” பா.ஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்கா ராவ் 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

”பேச்சுக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டால்... இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களுக்கும் தடை விதிக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.

 “ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக இந்திய அல்லது வங்காளதேச அரசிடம் ஆவணங்கள் இருப்பின் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே நாயக்குடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ள திக்விஜய் சிங், 

”கலந்துரையாடல் மத நல்லிணத்திற்கானது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானது. கலந்துரையாடலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இஸ்லாம் எதிரானது என்றும் விளக்கப்பட்டது,”என்று கூறியுள்ளார். 

”நாயக் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டது என்பது உண்மைதான். நான் அனைத்து இனவாத சக்திகளின் தாக்குதல் பற்றி பேசினேன். மத நல்லிணக்கத்திற்கும் அழைப்பு விடுத்தேன்,” என்று கூறிஉள்ள திக்விஜய் சிங் அரசு விசாரணையை எதிர்க்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார். 

ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
வங்கதேச தீவிரவாத தாக்குதலுடன் ஸாகிர் நாயக் தொடர்பு ! பாரதீய ஜனதாவின் விஷம பிரசாரம் வங்கதேச தீவிரவாத தாக்குதலுடன் ஸாகிர் நாயக் தொடர்பு ! பாரதீய ஜனதாவின் விஷம பிரசாரம் Reviewed by Madawala News on 7/07/2016 04:41:00 PM Rating: 5