Free Space

கண்டியில் இன்றுமாலை சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...


கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்திருக்கும் கண்டி-கொழும்பு பாத யாத்திரை நாளை கண்டி நகர எல்லையில் கெடம்ப மைதானத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் ..

இன்று கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் சர்வமத பிரார்தனைகளில் ஈடுபட்டனர்.

பெளத்த விகாரை , இந்து கோவில் , கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவைகளில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று இரவு எட்டு முப்பது மணியளவில் கண்டி மீராமக்கம் பள்ளிவாயலுக்கு சென்றதாக எமது மடவளை நியுஸ் நிருபர் குறிப்பிட்டார்.

அங்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மீராமக்கம் பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்தனை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கண்டியில் இன்றுமாலை சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ... கண்டியில் இன்றுமாலை சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ... Reviewed by Madawala News on 7/27/2016 08:18:00 PM Rating: 5