Oceas

ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு..


பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிஸ் மா அதி­ப­ரிடம்  நேற்றைய தினம் முறைப்­பா­டொன்று செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பு கிரு­லப்­ப­னையில் பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடாத்­திய ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும் பற்றி தவ­றான கருத்­துக்­களை வெளி­யிட்டும் புனித குர்­ஆனை இலங்­கையில் தடை செய்ய வேண்­டு­மெ­னவும் தெரி­வித்த கருத்­துகள் தொடர்பில் விசா­ரணை நடத்­தும்­படி முறைப்­பாட்டில் கோரப்­பட்­டுள்­ளது.

இம்­மு­றைப்­பாட்­டினை பொரளை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் உப தலை­வரும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் உப தலை­வ­ரு­மான எம்.எம்.எம். ரிகாஸ் சட்­டத்­த­ரணி எம்.ஏ.எம். சித்தீக் ஊடாக சமர்ப்­பித்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் தற்­பா­து­காப்பு கரு­தியும் இந்த முறைப்­பாடு முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 8 ஆம் திகதி ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர் புனித குர்ஆன் தீவி­ர­வா­தத்தை ஊக்­கு­விப்­ப­தா­கவும் உலமா சபைக்கும் தேசிய சூரா கவுன்­ஸி­லுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்­பதை தாம் கற்­பித்துத் தரு­வ­தா­கவும் சவால் விட்­டி­ருந்தார்.

ஞான­சார தேரரின் இவ் உரை தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு.. ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு.. Reviewed by Madawala News on 7/13/2016 11:49:00 AM Rating: 5