இஸ்­லா­மிய சமயக் கல்­வியை கற்க வரு­வ­தாக கூறி இலங்கை வந்தார்கள் என கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தீவிர விசாரனை ....


ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்தில் இணைந்­து­கொள்ளும் ஆசிய நாட்­ட­வர்கள் இலங்­கை­யை யும் தள­மாக பயன்­ப­டுத்­து­வ­தாக சர்­வ­தேச பாது­காப்பு பிரி­வுகள் தொடர்ச்­சி­யாக எச்­ச­ரித்­துள்­ளன. இந்­நி­லையில் இலங்­கையில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத ஊடு­ரு­வலை தீவி­ர­மாக 

ஆராய்ந்து வரு­வ­தாக பாது­காப்பு பிரிவு தெரி­வித்­துள்­ளது. 


இந்­தி­யாவின் கேர­ளாவைச் 17 பேர் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ் தீவி­ர­வாத இயக்­கத்தில் சேர்ந்­துள்­ள­தாக இந்­தி­யாவின் பிர­பல ஊடகம் ஒன்று அண்­மையில் தெரி­வித்­தி­ருந்த நிலையில், இந்­தி­யாவில் இருந்து வந்த இரண்டு முஸ்லிம் நபர்­களும் இலங்­கையில் இஸ்­லா­மிய சமயக் கல்­வியை கற்க வரு­வ­தாகக் கூறிய வந்­துள்­ளனர் என இந்­தி­யாவின் புல­னாய்வு துறை தற்­போது தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.இது தொடர்பில் நாம் ஆராய்கிறோம்.


இந்­நி­லையில் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த அமெ­ரிக்க இரா­ஜாங்க அதி­கா­ரிகள், தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி உதவிச் செய­லாளர் ஆகியோர் இலங்கை பாது­காப்பு தரப்­பினை சந்­தித்­தி­ருந்த நிலை­யிலும் இந்த கார­ணி­களை சுட்­டிக்­காட்­டினர். இது தொடர்பில் இலங்­கையின் பாது­காப்பு தரப்பு மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வ­தா­கவும், புல­னாய்வு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் பாது­காப்பு ஊட­கப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், 

மேற்­கத்­தேய மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களில் இன்று இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் அதி­க­ரித்து உள்­ளன. தற்­போது ஆசிய நாடு­க­ளிலும் பயங்­க­ர­வாதம் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றது. இந்­தி­யாவில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்பில் இணைந்­து­கொண்ட நபர்கள் தொடர்பில் செய்தி ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்ட போதிலும் இலங்­கையில் அவ்­வாறு எதுவும் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. 


எமது புல­னாய்வு பிரி­வினர் மிகவும் துல்­லி­ய­மாக இந்த விட­யங்கள் தொடர்பில் அவ­தா­னித்து வரு­கின்­றனர். அது தவிர்ந்து எமது பாது­காப்பு நட­வ­டிக்­களை பல­மா­கவே உள்­ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் இலங்கைக்குள் இஸ்லாமிய பயங்கரவாத ஊடுருவல் ஏற்பட்டுள்ளதா இலங்கையும் அச்சுறுத்தலான சூழலில் உள்ளதா என்பது தொடர்பில் எமது புலனாய்வு பிரிவும் பாதுகாப்பு தரப்பும் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்­லா­மிய சமயக் கல்­வியை கற்க வரு­வ­தாக கூறி இலங்கை வந்தார்கள் என கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தீவிர விசாரனை .... இஸ்­லா­மிய சமயக் கல்­வியை கற்க வரு­வ­தாக கூறி இலங்கை வந்தார்கள் என கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தீவிர விசாரனை .... Reviewed by Madawala News on 7/16/2016 11:35:00 AM Rating: 5