Free Space

வரி கட்டாது ஏமாற்றும் வர்த்தகர்கள் தான் கொழும்பில் போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். c



அர­சாங்­கத்­திற்கு வரி­களை செலுத்­தாது ஏமாற்றும் வர்த்­த­கர்­களே வற்­ வ­ரிக்கு எதி­ராக கொழும்பில் போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர் என குற்­றம்­சாட்­டிய
நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யாக, வற்­வரி தொடர்­பி­லான பிரே­ரணை இன்று (புதன்­கி­ழமை) பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட மாட்­டது என்றும் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நாய
மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பெரும்­பா­லான வர்த்­த­கர்கள் தாம் அர­சுக்கு செலுத்த வேண்­டிய சட்­ட­ரீ­தி­யான வரி­களை செலுத்­து­வ­தில்லை. அண்­மையில் கொழும்பில் வற்­வ­ரிக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்களில் பெரும்­பா­லானோர் அர­சுக்கு சட்­ட­ரீ­தி­யாக செலுத்த வேண்­டிய வரி­களை செலுத்­தாமல் "ஏய்ப்­ப­வர்­களே" ஆவார்கள்.

இவர்கள் நாட்டின் அரச வரு­மா­னத்தை இல்­லா­தொ­ழித்து மக்­களின் நலன்­பு­ரி­களை முன்­னெ­டுப்­பதை தடுப்­ப­வர்­க­ளா­வார்கள்.

வற்­வரி தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­தோடு, நாட்டு மக்­களின் கோரிக்­கை­களை செவி­ம­டுத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு தனியார் வைத்­தி­ய­சேவை, டாக்­டர்கள் பரி­சோ­தனை கட்­ட­ணங்கள், ஆய்­வு­கூட கட்­ட­ணங்கள் அனைத்­திற்கும் வற்­வரி நீக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற என்­றுமே பின்­னிற்­ப­தில்லை. இந்த வரியை தொடர்ந்தும் அற­விடும் நோக்கம் அர­சுக்கு இல்லை. கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவ­ரது ஆத­ர­வா­ளர்கள், நண்­பர்கள் என பெரும்­பா­லான செல்­வந்­த­வர்­க­ளுக்கு வரிச் சலுகை மட்­டு­மல்ல வரி செலுத்­து­வதிலிருந்தே விலக்கு அளிக்க்பபட்டது.

அத்­தோடு நாட்டின் பொரு­ளா­தாரம் மக்­களின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்­தாது. அர­சியல் ரீதி­யான தீர்­மா­னங்­களை மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கொண்டார். இதனால் அரச வரு­மானம் குறைந்­தது. அர­சுக்கு வரிகள் மூலமே வரு­மானம் கிடைக்கும். அவ்­வாறு கிடைக்­கா­விட்டால் மக்­க­ளுக்­கான நலன்­புரி சேவை­க­ளான சுகா­தாரம், கல்வி உட்­பட இல­வச சேவை­களை முன்­னெ­டுப்­பது கடி­ன­மாகும்.

தெற்­கா­சி­யாவில் ஏன் உலகில் நூற்­றுக்கு 22 வீதம் இல­வ­ச­மாக மக்­க­ளுக்­கான சேவைகள் எமது நாட்­டி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இன்­றைய நல்­லாட்­சியில் இல­வசக் கல்வி, சுகாதார சேவைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான நலன்புரிகளை நிறுத்த மாட்டோம்.

இன்று வற்வரி தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரி கட்டாது ஏமாற்றும் வர்த்தகர்கள் தான் கொழும்பில் போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். c வரி கட்டாது ஏமாற்றும் வர்த்தகர்கள் தான்  கொழும்பில் போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். c Reviewed by Madawala News on 7/20/2016 09:18:00 AM Rating: 5