Kidny

Kidny

மஹிந்­தவின் பாத­யாத்­திரை வெற்­றி­கா­ணுமா? கொழும்­பில் ­நாளை பலப்­ப­ரீட்சை. c-லியோ நிரோஷ தர்ஷன்

வலு­வான அர­சியல் ஸ்திர­தன்­மையை மக்கள் மத்­தியில் நிலை நிறுத்தும் நோக் கில் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் கூட்டு எதிர்க்கட்சியின் கொழும்பு நோக் ­கிய பாத­யாத்­திரை நாளை திங்­கட்­கி­ழமை இறுதி இலக்கை அடைய உள்­ளது.

கண்டி மற்றும் மாவ­னெல்லை நீதி மன்­றங்கள் இரண்டு தடை உத்­த­ர­வு­களை விதித்­தி­ருந்த நிலையில் கேகாலை, வறக்­கா­பொல மற்றும் பேலி­ய­கொடை நீதி மன்­றங்கள் பாத­யாத்­திரை தொடர்பில் பொலி­ஸா­ரினால் கோரிய தடை உத்­த­ரவை நிரா­க­ரித்­துள்­ளன. இந்­நி­லையில், மஹிந்த அணி­யி­னரின் எதிர்­பார்ப்­புகள் வெற்றி இலக்கை அடை­யுமா?

என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் பாதயாத்­திரை கொட்டும் மழைக்கு மத்­தியில் நெலுந்­தெ­னி­யவில் இருந்து நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இதன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறு­னப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும, எத்­தனை தடைகள் வந்­தாலும் கொழும்பை நோக்­கிய பாத­யாத்­தி­ரையை வெற்­றிக்­க­ர­மாக முன்­னெ­டுப்போம் என்றார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் கண்­டி­யி­லி­ருந்து கொழும்பை நோக்­கிய ஐந்து நாள் பாத­யாத்­திரை இன்று நிட்­டம்­பு­வையில் இருந்து கிரி­பத்­கொ­டையை நோக்கி வர­வுள்­ளது. இறுதி நாளான நாளை திங்கட் கிழமை கிரி­பத்­கொ­டை­யி­லி­ருந்து கொழும்பை நோக்கி பாத­யாத்­திரை வந்து சேரும்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கண்டி தலதா மாளி­கைக்கு முன்­பாக கொழும்பை நோக்­கிய பேரணி ஆரம்­பிக்­கப்­பட இருந்த நிலையில் நீதி மன்ற உத்­த­ர­விற்கு அமை­வாக கண்டி நகர எல்­லைக்கு வெளியில் பாத­யாத்­தி­ரையை ஆரம்­பிக்க வேண்­டிய நிலை கூட்டு எதிர் கட்­சி­யி­ன­ருக்கு ஏற்­பட்­டது. இதனால் கெடபே விகா­ரைக்கு அருகில் இருந்து காலை 10 மணி­ய­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கொழும்பை நோக்­கிய பாத­யாத்­திரை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமல் வீர­வன்ச, டளஸ் அழ­கப்­பெ­ரும, கேஹெ­லிய ரம்­புக்­வெல்ல, நாமல் ராஜபக் ஷ, உதய கம்­மன்­பில, பவித்ரா வன்­னி­யா­ராச்சி, மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே, திலும் அமு­னு­கம, கீதா குமா­ர­சிங்க, குமார வெல்­கம, சீ .பி.ரத்­நா­யக்க, ஜொன்ஸ்டன் பெர்­னா­ண­டடோ பிர­சன்ன ரண­துங்க, தினேஸ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, திஸ்ஸ விதா­ரண, பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரோஹித அபே­கு­ண­வர்­தன உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அனை­வரும் கலந்துக் கொண்­டனர்.

முதல் நாள் மானெல்லை வரை பேரணி செல்லும் என ஆரம்­பத்தில் அறி­விக்­கப்­பட்ட நிலையில் மாவ­னெல்லை நீத­வானின் தடை உத்­த­ரவு கார­ண­மாக பாத­யாத்­திரை கனே­தென்ன பகு­தியில் நிறை­விற்கு வந்­தது. இரண்டாம் நாள் உத்­து­வன்­கந்த பகு­தியில் ஆரம்­பித்த பாத­யாத்­திரை கேகாலை ஊடாக நெலுந்­தெ­னிய என்ற இடத்தில் நிறை­வ­டைந்­தது. மூன்­றா­வது நேற்று சனிக்­கி­ழமை நெலுந்­தெ­னி­ய­வி­லி­ருந்து நிட்­டம்­பு­வையை நோக்கி நகர்ந்­தது.

நான்­கா­வது நாளான இன்று பாத­யாத்­திரை நிட்­டம்­பு­வையில் இருந்து கிரி­பத்­கொடை நோக்­கியும் இறு­தி­நா­ளான நாளை திங்கட் கிழமை கிரி­பத்­கொ­டை­யி­லி­ருந்து கொழும்பு ஹயிட்பார்க் மைதானம் வரை சென்று கூட்டு எதிர் கட்­சியின் தலை­வர்­களின் உரை­களின் பின்னர் நிறை­வ­டையும். புதிய அரசியலமைப்பில் நாட்டிற்கு எதிரான சதி, தேர்தல் ஒத்திவைப்பு, வரி அதிகரிப்பு, இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம், விவசாயிகளுக்கான மானிய இரத்து மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் ஆகிய 6 விடயங்களை மையப்படுத்தியே கூட்டு எதிர் கட்சி எதிர்ப்பு பாதயாத்திரையை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்­தவின் பாத­யாத்­திரை வெற்­றி­கா­ணுமா? கொழும்­பில் ­நாளை பலப்­ப­ரீட்சை. c மஹிந்­தவின் பாத­யாத்­திரை வெற்­றி­கா­ணுமா?  கொழும்­பில் ­நாளை பலப்­ப­ரீட்சை. c Reviewed by Madawala News on 7/31/2016 01:03:00 PM Rating: 5