C.I.A. துருக்கியில் என்ன செய்தது....!


-அபு மஸ்லமா-
UN-இனது உறுப்பு நாடு ஒன்றின் மீது இராணுவ சதிப்புரட்ச்சி நிகழ்த்தப்பட்டால் அதன் ஏனைய உறுப்பு நாடுகள் அதனை வன்மையாக உடனடியாகவே கண்டிக்கும்.  ஆனால் துருக்கி விவகாரத்தில் UN-ஐயும் தாண்டி அது நேட்டோவின் பங்காளி தேசம். இருந்த போதும் அமெரிக்கா, ஜேர்மன், இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் கண்டனங்களை வெளியிட 24 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டன.

இராணுவ புரட்ச்சிப்படையின் கடைசி கடை நிலை தளபதியும், அதன் பின்னின்ற தலைவர்களும் தப்பி ஹெலிகொப்டரில் கிறீஸ் சென்று விட்டார்கள், இனி புரட்ச்சி வெற்றி பெற எந்த சாத்தியமும் இல்லை என்ற நிலையிலேயே ஜோன் கெரி வாய்திறந்தார். தமது துருக்கிய அரசிற்கான ஆதரவை அறிவித்தார். 

C.I.A. உலகில் பல ஆட்சிக்கவிழ்ப்புக்களை செய்துள்ளது. அதன் மொத்த அனுபவமும் துருக்கிய புரட்ச்சியில் செயற்படுத்தப்பட்டது. ஆனாலும் ஆட்சிக் கவிழ்ப்பு தோற்றுப்போய் விட்டது. புரட்ச்சி வெடித்தவுடன் எர்டோகான் தனது இராணுவத்தை அதற்கு எதிராக இயக்குவார் என்றே பென்டகன் எதிர்பார்த்தது. அப்படி நிகழ்ந்தால் உக்ரைன் போன்ற ஒரு நீண்ட உள்நாட்டு போரை தூண்டிவிட 
C.I.A. பின்தள ஏற்பாடுகளை செய்திருந்தது.

உக்ரைன், கிரீமியா போன்று துருக்கியினுள் இரண்டு இராணுவ மோதல்களையும், குர்திஷ் பிரிவினை மோதல்களையும் உருவாக்கி அவர்களிற்கு ஆயுத உதவியளிக்கும் நீண்ட திட்டமது. 

ஏர்டோகானின் ஆட்சி மாற்றம் என்பது, இன்செர்லிக் (Incirlik) வான்தளத்தை ரஷ்யா வசம் செல்லாமல் தடுப்பது என்பது ஒரு இலக்கு மட்டுமே. மற்றைய இலக்கு இஸ்லாதிய வல்லரசு (குஃப்பாரிய பார்வையில்)  உருவாவதை தடுப்பது. துருக்கிய இராணுவத்தின் வல்லமை சிதைக்கப்பட இந்த உள்நாட்டு போர் பெரிதும் உதவும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏர்டோகான் மக்கள் சக்தியை அதற்கு எதிரான ஆயுதமாக திருப்பி விடுவார் என்று அவர்கள் எண்ணவில்லை. 

இப்போது மேற்கின் ஜனநாயகமும், மனித உரிமையும் துருக்கியில் ஏர்டோகான் அரசின் ஏதேச்சாதிகாரம் பற்றி பேச ஆரம்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள் பற்றிய பதிவுகளை எடுக்க ஆரம்பித்துள்ளன.
C.I.A. துருக்கியில் என்ன செய்தது....! C.I.A.  துருக்கியில் என்ன செய்தது....! Reviewed by Madawala News on 7/21/2016 02:12:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.