C.I.A. - எர்டோகானை மட்டும் தான் விலைக்கு வாங்கவில்லை.......!

 
-அபு மஸ்லமா-
துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைச் சுற்றி நடந்த சம்பவங்கள் சம்பந்தமாக தொடர்ந்து வெளிவரும் செய்திகள், ஒரு மிகப்பெரிய நடவடிக்கை குறித்த சித்திரத்தை வழங்குகின்றன. தென்மேற்கில் உள்ள மர்மாரீஸ் ஓய்வுவிடுதியில் விடுமுறையில் இருந்தபோது எர்டோகனே கூட படுகொலை செய்யப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. 

ஒரு மூத்த இராணுவ தளபதி அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பாரென அவர் அங்கிருந்து இஸ்தான்புல்லுக்கு (அன்காராவிற்கு அல்ல) வெளியேறிய சிறிது நேரத்தில், அவர் தங்கியிருந்த விடுதி ஹெலிகாப்டர் துருப்புகளால் தாக்கப்பட்டது.

அமெரிக்காவில் தங்கியுள்ள, பரவலாக சிஐஏ இன் சொத்தாக இருப்பதாக நம்பப்படும், அவரின் எதிரி பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சூத்திரதாரியாக இருந்திருப்பதாக எர்டோகன் குற்றஞ்சாட்டினார். கூலனை நாட்டிடம் திரும்ப ஒப்படைக்க கோரி அமெரிக்க அரசிற்கு உத்தியோகபூர்வமாக ஒரு கோரிக்கை விடுக்க அங்காரா திட்டமிட்டு வருகிறது.

இதுவரையில், துருக்கிய கடற்படையின் விசுவாசமும் நிலைப்பாடும் தெளிவாக தெரியவில்லை. செவ்வாயன்று இலண்டனை மையமாக கொண்ட டைம்ஸ்பத்திரிகை அறிவிக்கையில், துருக்கிய கடற்படையின் கட்டளை பிரிவு அட்மிரல் Veysel Kosele, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடங்கியதற்குப் பின்னர் இருந்து தொடர்பில் இல்லை, 14 போர்க்கப்பல்கள் மற்றும் 25 சிறப்பு படை துருப்புகள் காணாமல் போயிருப்பதாக நம்பப்படுகிறது.

காணாமல் போயுள்ள கடற்படை ரோந்து கப்பல்கள் ஏகியன் கடலில் கிரேக்க கடல்பகுதியில் காணப்பட்டதாக வந்த செய்திகளை சரிபார்க்க அங்காரா புதனன்று F-16 ரக போர்விமானங்களை அனுப்பியதாக துருக்கிய இராணுவ ஆதாரநபர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் விமானப் படை தளபதியும் மற்றும் துருக்கிய தலையாய இராணுவக் குழு அங்கத்தவருமான Akın Öztürk, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் திட்டமிட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். எர்டோகனின் கையாளான படைத்தளபதி அலி யாஜிசி உம் (Ali Yazici) உள்ளடங்குவார்.

எர்டோகனின் சொந்த உயர்மட்ட இராணுவ ஆலோசகர், இர்செர்லிக் விமானப்படை தளத்தின் தளபதி, மற்றும் பலம் வாய்ந்த இந்த இரண்டாவது இராணுவத்தினது தளபதி ஆகியோரும் அவரின் குழுவில் உள்ளடங்கி இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. கைது செய்யப்பட்டிருந்த அதேவேளையில் அவரது முகத்தில் காயங்களுடன் காணப்பட்ட Öztürk, எந்தவிதத்திலும் தாம் சம்பந்தப்படவில்லை என்று மறுத்துள்ளார்.

எர்டோகன் அவரின் விசுவாசியான பினாலி யெல்டிரிம் ஐ கொண்டு பிரதியீடு செய்திருந்த அவரின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஒத்துழைப்பாளருமான பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் AKP இன் துணை-ஸ்தாபகருமான அப்துல்லாஹ் குல் (Abdullah Gul) ஆகியோர் உள்ளடங்கலாக எர்டோகன் சமீபத்திய மாதங்களில் அவரின் அரசியல் எதிரிகளை ஓரங்கட்ட முயன்றிருந்தார். குறிப்பாக தாவ்டோக் இன் பலவந்தமான இராஜினாமா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் இருதரப்பையும் எரிச்சல் அடைய செய்திருந்தது.
C.I.A. - எர்டோகானை மட்டும் தான் விலைக்கு வாங்கவில்லை.......! C.I.A. - எர்டோகானை மட்டும் தான் விலைக்கு வாங்கவில்லை.......! Reviewed by Madawala News on 7/23/2016 11:13:00 PM Rating: 5