tg travels

கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்ணும் இனிமேல் வெளிநாடு செல்லப்படாது.. முயற்சியை செயல் வடிவில் காட்டும் முதலமைச்சர். cm



ஏறாவூரில் சுமார் 100 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு “சகோதரிகளுக்கு உதவுவோம்” எனும் தலைப்பில் தொழில் பயிற்சி மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவியேற்றதில் இருந்து இன்றுவரை கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்ணும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது.

அதற்கான மாற்று நடவடிக்கைகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு கைத் தொழில் மற்றும் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இச் செயற்பாட்டுக்கு அனைத்து அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையில் நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையின் நான்காவது கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தொழிற் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லீம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நிலையத்துக்கான உதவிகளைச் செய்தனர்.

இந்நிகழ்வில் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் பல யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்ணும் இனிமேல் வெளிநாடு செல்லப்படாது.. முயற்சியை செயல் வடிவில் காட்டும் முதலமைச்சர். cm கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்ணும் இனிமேல் வெளிநாடு செல்லப்படாது.. முயற்சியை செயல் வடிவில் காட்டும் முதலமைச்சர். cm Reviewed by Madawala News on 7/24/2016 02:15:00 PM Rating: 5