ஜிந்தாவுக்கான புதிய consulate general இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
சவூதி அரேபியாவின் ஜிந்தாவுக்கான புதிய consulate general ஆக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை  இன்று சந்தித்து கலந்துரையாடினார். 

இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

“ஜிந்தாவுக்கான consulate general ஆக நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்வரும் சில நாட்களில் அவர் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். 


இக்கலந்துரையாடலின் போது தனது கடமையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பைசல் மக்கீன் கோரிக்கை விடுத்திருந்தார். நிச்சயம் எனது ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு உண்டு.”- என்றார். 

இதன் போது கருத்துத் தெரிவித்த ஜிந்தாவுக்கான புதிய consulate general பைசல் மக்கீன்,
“இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் மிகவும் நெருக்கமாக நாம் கடமையாற்றுவோம். நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாம் புரிந்துணர்வுடன் செயலாற்றவுள்ளோம். இரு நாட்டு உறவினை மேலும் வலுவூட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.  இராஜாங்க அமைச்சரின் ஆதரவுக்கு நன்றி” – என்றார்
ஜிந்தாவுக்கான புதிய consulate general இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு ஜிந்தாவுக்கான புதிய consulate general   இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு Reviewed by Madawala News on 7/20/2016 05:16:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.