Accaddemy

இந்த வருடம் குறைந்தளவிலான மரணம். d



இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 75 இனால் குறைந்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் சைக்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பனவே வாகன விபத்துக்களில் அதிகம் இடம்பிடித்துள்ளமை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தினால் ஏற்பட்டுள்ள மரண வீதம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். D C
இந்த வருடம் குறைந்தளவிலான மரணம். d இந்த வருடம் குறைந்தளவிலான மரணம். d Reviewed by Madawala News on 7/23/2016 09:02:00 AM Rating: 5