Accaddemy

முதலில் இவரைப் பார்த்து உலகம் விழுந்து விழுந்து சிரித்தது.. ஆனால் இன்று அதிரடி மாற்றங்கள். dt



-Zafar Ahmed -

முதலில் அவரைப் பார்த்து உலகம் விழுந்து விழுந்து சிரித்தது..தோற்றத்தைப் பார்த்து நக்கல் அடித்தது..அமெரிக்காவின் தேசிய அவமானம் என்று பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கங்கள் எழுதின..

முஸ்லிம் உலகும் அமெரிக்கா வாழ் இஸ்லாமியர்களும் கழுத்து வெட்டக் காத்திருக்கும் கிடாய் ஆடுகள் போல முழிக்க அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உட்பட புகலிடம் கோரி தஞ்சமடைந்திருந்த மக்களும் என்ன எழவு நடக்கப் போகுதோ என்று பதைபதைத்தனர்..

ஆனால் இன்று அதிரடி மாற்றங்கள்.ஏகப்பட்ட திருப்பங்கள்.அமெரிக்காவின் குடியரசு கட்சியின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராய் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.டொனல்ட் ட்ரம்ப்..மீடியாக்களாலும் சமூகவலைதளங்களாலும் ஏளனம் செய்து எட்டி உதைக்கப்பட்ட அதே ட்ரம்ப்.
ட்ரம்பை எதிர்த்து முன்னால் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டி இட உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன..

இது எங்கோ ஒரு நாட்டில் நடக்கும் தேர்தல்..நாம் நமது பிள்ளையை பாடசாலையில் விட்டு விட்டு மீன்வாங்கி வருவோம் என்று அலட்சியம் செய்துவிட முடியாது..அமெரிக்கா என்ற தேசம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்வாதாரத்தில் கலந்து பல தசாப்தங்களாகிவிட்டன.

இன்று எந்த நாட்டுப் பிரஜையும் பொருளாதாரம் முதல் அரசியல் வரை எதைப் பேசினாலும் அமெரிக்கா என்ற சொல்லைத் தவிர்க்கவே முடியாது.அதற்கேற்றாற் போல் அமெரிக்காவும் எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய கிழக்கு முதல் பஞ்சத்தில் உலாவும் சோமாலியா வரை தனது நலனுக்கு குந்தகம் இல்லாத ஆட்சியாளர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

உலகம் அதன் சரித்திரத்தில் விசித்திரமான ஆட்சியாளர்களைப் பார்த்து இருக்கிறது.கோமாளிகளைக் கண்டிருக்கிறது. மிக மோசமான இனவாதிகளைக் கண்டிருக்கிறது.பைத்தியங்களைப் பார்த்து பரவசப்பட்டு இருக்கிறது.. ட்ரம்ப் போல் ஒரு பச்சை இனவாதி அமெரிக்காவிற்கு கிடைத்தால் எந்திரனில் ரோபோவுக்கு ரெட் சிப் மாற்றினது போல் மெகா அழிவுகளின்.சக்கரவர்த்தியாய் இருப்பார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்..

ட்ரம்ப் உடன் ஒப்பிடும் போது ஹிலாரி ஏமன் தேசத்தின் போராளி தவாக்குல் கர்மான் ரேஞ்சுக்கு சிலருக்கு தெரிகிறார்.. ஆனால் ஹிலாரி வந்தாலும் சரி, ட்ரம்ப் வந்தாலும் சரி ரெண்டுமே ஒன்னுதான்..ரெண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்...அவை மனித குலத்திற்கே எதிரானவை....

By: -Zafar Ahmed -
முதலில் இவரைப் பார்த்து உலகம் விழுந்து விழுந்து சிரித்தது.. ஆனால் இன்று அதிரடி மாற்றங்கள். dt முதலில் இவரைப் பார்த்து உலகம் விழுந்து விழுந்து சிரித்தது.. ஆனால் இன்று அதிரடி மாற்றங்கள். dt Reviewed by Madawala News on 7/25/2016 11:43:00 AM Rating: 5