Ad Space Available here

கிழக்கின் எழுச்சியும் விஸ்தரிக்கப்படும் செயல்பாடுகளும். eஓரிரு வார சமூக ஊடகங்கள் மூலமான  அறிமுகத்தை தொடர்ந்து கிழக்கின் எழுச்சி மாவட்ட ரீதியான  செயல்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது. மாவட்ட ரீதியான இணைப்புக்குழுக்களை  கிழக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நியமித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதை சென்ற வாரங்களில் சமூக ஊடங்களில் வெளியான செய்திகளூடாக அறியக்கிடைக்கிடைக்கிறது.

அந்தந்த மாவட்டங்களிலிருந்து அறியக்கிடைத்த தகவல்களின்படி  அனேகமான எழுத்தாளர்களும்(குறிப்பாக கவிஞர்கள்),சட்டத்தரணிகளும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதை அறிய முடிகிறது. கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறுக் சர்வதேச மட்டத்தில் நன்கு பிரபல்யமான ஒரு தத்துவார்த்த கவிஞராயிருப்பதும், செயலாளர் ஆஸ்ஸூர்  ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட உற்சாகம் மிகுந்த  செயல்பாட்டாளராய் அமைந்துள்ளமையும்  மேலதிக பலத்தையும் அங்கீகரிப்பையும் கொடுத்துள்ளது.

தலைவர் வபா பாறுக் கடந்த ஓரிரு வருடங்களாய் பக்க வாத நோயினால் பீடிக்கப்பட்ட நிலையிலும் அசௌகரியங்களை சகித்துக்கொண்டு சிரமத்துடன் மேற்க்கொள்ளும் எழிமையான முறையிலான நடவடிக்கைகளும் சோடனையில்லாது நேரடியாக விடயங்களை பேசும் முறைமையும் படித்தவர்களையும் சாதார மக்களையும் மிகவும் கவர்ந்து வருகின்றது. இதுகாலவரை கண்டுகொண்டுவரும் டாம்பீக அரசியலிலிருந்து மாறுபட்ட கிழக்கின் எழூச்சியின் செயல்பாடுகள் புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளதை உணர முடிகிறது.

இஸ்லாமிய தலைமைத்துவ நிறுவலே கிழக்கின் எழுச்சியின் இறுதி இலக்கு என்ற பிரகடணம் இளைஞர்களையும் வெகுவாய் கவர்ந்து வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராய் செயல்பட்ட எந்த அரசியல் சக்திகளுடனும் உறவோ தொடர்போ வைத்துக்கொள்ளாத தனித்துவமான போக்கு கிழக்கின் எழுச்சியின் சிறப்பம்சமாய் தென்படுகிறது.

 கிழக்கின் எழுச்சிக்கு  எதிராய் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இதுவரை எதிர்வாதத்தை முன்வைக்காத நிலையில் விலாசமற்ற பக்கசார்புடைய சிலரால் ஊடகவியல் தர்மத்தை சிறிதேனும் கவனத்தில் கொள்ளாத கேவலமான விமர்சனங்கள் ஹக்கீமின்  கைக்கூலிகளின் எழுத்துக்கள் என்பதை மக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

மறுபுறம், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரத்தில் கடந்த 3 தசாப்தங்களாக இலங்கை முஸ்லிம்கள் விவகாரத்தில் உன்னிப்பான அவதானம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுவரும்  D B S ஜெயராஜ் போன்றோரின் கவனத்தை கிழக்கின் எழுச்சி ஈர்ந்துள்ளதானது அவ்வமைப்பை வெகுவாக சர்வதேச மயப்படுத்தியுள்ளது.
மேலும் கிழக்கின் எழுச்சியை எதிர்ப்பவர்களில் கிழக்கின் அக்கரைப்பற்றைச்சேர்ந்த, மறைந்த மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் மரணத்தை பட்டாசு கொழுத்திக்கொண்டாடிய திரு. தவம் போன்றோர் முன்னிலை வகிப்பதால் கிழக்கின் எழுச்சி ஸ்தாபத்தலைவர் அஷ்ரபின் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய தலைவர் ஹக்கீமின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான பனிப்போராக மாற்றம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

 எது எவ்வாறாயினும் கிழக்கின் எழுச்சி மிக நுட்பமான திட்டங்களுடன் திடமான முன்னெடுப்பை மேற்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது.   நோன்பு காலம் நிறைவுற்றதும் எழுச்சியின் களச்செயல்பாடுகளை கண்டுகொள்ளலாம் என்பதை கிழக்கின் எழுச்சி முக்கியஸ்தர்களின் கருத்துகளில் இருந்து ஊகிக்க முடிகிறது.

"வரையறைக்குள் பயணிப்பதும்
வரம்புகளை தாண்டுவதும்
எதிரியின் கைகலிலே"

 என்ற வபா பாறுக்கின் வரிகளுக்கான அர்த்தங்களை எதிர்வரும் நாட்களில்தான் புரியலாம்.
               -அரசியன்-

குறிப்பு: இக்கட்டுரை நீண்டுவிடும் என்பதால் ஹக்கீமின் நிலைப்பாடும் எதிர்ச் செயற்பாடுகளும் பற்றிய ஆயவுகளை தனியாக அடுத்த கட்டுரையில் எதிர்பாருங்கள்

கிழக்கின் எழுச்சியும் விஸ்தரிக்கப்படும் செயல்பாடுகளும். e கிழக்கின் எழுச்சியும் விஸ்தரிக்கப்படும் செயல்பாடுகளும். e Reviewed by Madawala News on 7/05/2016 12:05:00 PM Rating: 5