இந்தியாவில் இன்று தான் நோன்புப் பெருநாள். Eid Mubarak



அரபு நாடுகள், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் நேற்று நோன்புப் பெருநாள் கொண்டாடபட்ட நிலையில் இன்று இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

29 நோன்புகளை பிடித்த நிலையில் அங்கு ஷவ்வால் பிறை தென்படவில்லை என்றும் 30 நோன்புகளை பூர்ர்த்தி செய்து இன்று  7.7.2016 வியாழக்கிழமை  நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும்நோன்புப் பெருநாள்  ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வானில் பிறை தென்படவில்லை என்பதால் இன்றே  தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக  செய்தியாளர்களை சந்தித்த அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப்  தெரிவித்தார்.

 அத்துடன் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை இன்று வியாழக்கிழமை விடப்பட்டுள்ளது.

அதேவேளை  (இலங்கையில் போல்) செவ்வாய்க் கிழமை  மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் பிறை தென்பட்டது என அறிவித்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  நேற்று 06-07-2016 புதன்கிழமை நோன்பு பெருநாளாளை தமிழகத்தில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் இன்று தான் நோன்புப் பெருநாள். Eid Mubarak இந்தியாவில் இன்று தான் நோன்புப் பெருநாள். Eid Mubarak Reviewed by Madawala News on 7/07/2016 08:09:00 AM Rating: 5