Free Space

( படங்கள் இணைப்பு) நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகைகள். ஒரே பார்வையில். eid



பாறுக் ஷிஹான் ( யாழ் முற்றவெளி அரங்கில்)

யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய தவ்ஹீத் ஜமாத்  முஸ்லீம் மக்கள் தமது    ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளின்  விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.


ஈதுல் பித்ர் நோன்பு  பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். இதன் போது தொழுகையை மௌலவி பைசர் மதனி மேற்கொண்டார்.
ஈதுல் பித்ர் நோன்பு  பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இதில் பெருந்திராளான மக்கள் பல்கலைகழக முஸ்ஸிம் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ரமழான்  பெருநாள் மகிமைகள் தொடர்பாக சிறப்புரைகளும் இங்கு இடம்பெற்றன.







பாறுக் ஷிஹான் ( யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அருகில்)

புனித  ஈதுல் பித்ர்   நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா iதானத்தில்  இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது.
இதன் போது   பொம்மைவெளி அபூபக்கர்   பிரதான இமாம் எம்.பரூஸ்  தொழுகையை மேற்கொண்டார்.

இதன்போது பெருந்திரளான மக்கள் அதில்  பங்கேற்றனர்.









(எஸ்.அஷ்ரப்கான்) (கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில்)

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல்,  கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்ற  புனித நோன்புப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) புதன் கிழமை இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு ஆண் பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற  இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் நடாத்திவைத்தார்.






அனா ( ஓட்டமாவடி – செம்மண்ஓடை அல் - ஹம்ரா வித்தியாலய மைதனாத்தில் )

இன்று (புதன்கிழமை) 06.07.2016 உலக முஸ்லீம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இதன் அடிப்படையில் கல்குடா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் ஓட்டமாவடி – செம்மண்ஓடை அல் - ஹம்ரா வித்தியாலய மைதனாத்தில் காலை 06.20க்கு இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் கொத்பா உரையினையும் கல்குடா தௌஹீத் ஜமாத்தின் பொதுத் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது (காசிமி) நடாத்தி வைத்ததுடன் ஓட்டமாவடி, வாழைசN;சனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டனர்.


- இக்பால் அலி- பறகஹதெனிய 
பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் விசேட நோன்புப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய அரபுக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விசேட பெருநாள் தொழுகையையும் குத்பா பேருரையையும் கலாநிதி அஷ;nஷய்க் அம்ஜத் ராசிக் நடத்தி வைப்பதையும்.

இதில் பெரு எண்ணிக்கையான ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டதையும் படஙடகளில் காணலாம். 



(அல் அதர் மீடியா) காத்தான்குடி கடற்கரையில்..

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) இன்று (06) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

அதகளவான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை ஆர்வத்துடன் நிறைவேற்றினர்.

பொருநாள் தொழுகையைiயும் குத்பாவையும் ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி ஏ.எம். அப்துல் ஹனி (ஹாமி) அவர்கள் நிகழ்த்தினார்.
 
DHARUL ATHAR ADH DHAVIYYA,




(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற  புனித நோன்புப் பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட படங்கள். 


SLTJ கொழும்பு மாவட்டம் சார்பில் கொழும்பு, மாளிகாகந்தை, வைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை.

 #உரை: சகோ. ஜமால் உஸ்மானி (மாநில பேச்சாளர் TNTJ)

புனித நோன்புப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை இஸ்லாமிய பிரச்சாரமையத்தின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை நேற்று(06-07-2016)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது இதில் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தெழுகை நடாத்தி ஜூம்ஆ பிரசங்கமும் நிகழ்த்தினார் இங்கு பெரும் தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.



கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் நோன்பு பெருநாள் தொழுகை
எம்.ரீ.எம்.பாரிஸ் - 
மட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை  இன்று (06.07.2016) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை  அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினையும்,குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) நடாத்தினார்.



கத்தாரில் இலங்கையர்களின் பெருநாள் தொழுகை
(கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு தொழுகை மற்றும் கொத்துபா பேருரை கத்தார் இலங்கை பாடசாலை மைதானத்தில் இன்று (07-06-2016) நடைபெற்றது.
காலை 5 மணிக்கு ஆரம்பமான இத்தொழுகையில் கத்தாரின் பல பாகங்களிலும் வசிக்கும் பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர்.

நோன்பினில் செய்த அமல்களை விட்டுவிடாது தொடர்ந்து செய்து வருவது தொடர்பாக அஷேய்க் சியாவுதீன் (மதனி) கொத்துபா பேருரை நிகழ்த்தினார்.
இலங்கை முஸ்லிம் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் இத்திடல் தொழுகையினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


( படங்கள் இணைப்பு) நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகைகள். ஒரே பார்வையில். eid ( படங்கள் இணைப்பு) நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற  ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகைகள். ஒரே பார்வையில். eid Reviewed by Madawala News on 7/06/2016 10:30:00 AM Rating: 5