Free Space

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான கால்பந்து சுற்றுப்போட்டி. fb



உலமாக்களுக்கான மென்பந்து கிரிகெட் தொடரை அறிமுகம் செய்து வைத்த தென்னிலங்கையின் மாத்தறை மாவட்ட உலமாக்களினால் கால்பந்து சுற்றுத்தொடரும் அறிமுகம் செய்து வைக்கபப்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

 இறைவனின் பேருதவியால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்தறை உயன்வத்தை கால்பந்து மைதானத்தில் குறித்த சுற்றுப்போட்டியை நடாத்துவதற்கு மாத்தறை "FC Southern Medrid" அணி முடிவு செய்துள்ளது.

 நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 அத்தோடு சுற்றுப்போட்டியில் சம்பியன் ஆகும் அணிக்கு 40,000/- ரூபா பணமும் வெற்றிக்கின்னமும் , இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 20,000/- ரூபா பணமும் வெற்றிக்கின்னமும் பரிசாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி சம்பந்தமான மேலதிக தொடர்புகளுக்கு.
மெளலவி அப்துல்லாஹ் பாரி 0777076624 /  0715857563
மெளலவி இஸ்மத் பாரி 0777590358 /  0713837094

பணத்தால் பொருளால் இப்போட்டித்தொடருக்கு உதவவிரும்பும் நல்லுள்ளம் படைத்தவர்களும் அப்துல்லாஹ் மெளலவி அவர்களை தொடர்புகொள்ளலாம்.

குறிப்பு : இப்போட்டித்தொடரில் உலமாக்கள் ஹாபிழ்கள் அல்லாத வேறு யாரும் பங்குபற்ற முடியாது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான கால்பந்து சுற்றுப்போட்டி. fb இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான கால்பந்து சுற்றுப்போட்டி. fb Reviewed by Madawala News on 7/27/2016 07:05:00 PM Rating: 5