Ad Space Available here

சகோதர இன மக்களுடன் ஒரு நோன்புப் பெருநாள் நிகழ்வு... கம்பளை இலங்கவத்த மக்களின் அழகான முன் மாதிரி. g'ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக் கொப்பவே கம்பளை இலங்கவத்த ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகமும், அவ்வூர் நலன் விரும்பிகளின் செயற்பாடும் அமைந்திருந்தது.

தமதூரில் பிற சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் நன்நோக்கில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சென்ற 10.07.2016 அன்று ஒரு மாபெரும் விருந்தோம்பல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்வில் கம்பளையின் மிக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உடபலர்தத (கம்பளை) பிரதேச செயலாளர் திரு.அனுருத்த பியதாச, உடபலாதபிரதேச பிரதிச் செயலாளர்  திருமதி விஜேரத்ன, உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் கிராம சேவகர் கண்காணிப்பாளர் திரு. பீ.பீ.திஸாநாவக்க,கம்பளை பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. யாப்பா பண்டார, கிராம சேவகர் திருமதி விஜித பெரேரா,குடும்ப சுகாதார வைத்திய உத்தியோகத்தர் திருமதி லக்மினி,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கயானி, திவிநெகும உத்தியோகத்தர் திருமதி நிஷாதி,பிரதேச சுகாதார பரிசோதகர் உத்தியோகத்தர் திரு.பண்டார ஆகியோரும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பமாக ' நோன்பு என்றால் என்ன? அதன் முறைகளும் விதிகளும்' பற்றி சகோ. தூரிக் அவர்கள் முன்வைத்தார்கள்.

தொடர்ந்தும் கருத்துக் கூறிய உட பலர்தத (கம்பளை) பிரதேச செயலாளர் திரு.அனுருத்த பியதாச அவர்கள் 'உண்மையில் முஸ்லிம்கள் மார்க்க விடயத்தில் எம்மை விட மிக பக்தியுள்ளவர்கள் மட்டுமல்ல பற்றுள்ளவர்களும் கூட. இதனை வெள்ளிக்கிழமை தின வழிபாட்டில் எமக்குத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

பசித்திருந்து ஏழைகளின் பசியுணர்வை விளங்குவதானது ஒரு மிகப் பெரிய பண்பாகும். அதனை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. உண்மையில் இந்நிகழ்வு ஒரு மகிழ்ச்சிகரமானதாகும்.

ஓவ்வொருவரும் தமது கலாசாரத்தை பின்பற்றுவது போலவே பிறமத கலாசாரங்களையும் அறிந்து கொள்ள இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பமாகும்' எனவும் கூறினார்.

தொடர்ந்தும் விருந்துபசாரம் நடைபெற்றது.

இறதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்கள் தமது நன்றியுரையில் ' இந்த விருந்துபசாரத்தில் எவ்வித தனிப்பட்ட எதிர்பார்ப்பும் கிடையாது. மாற்றமாக நாட்டின் தற்போதைய சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும்.

இவ்விதமான சூழ்நிலையில் எமது முஸ்லிம் தலைமைகள் இது போன்ற சகவாழ்வுக்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவே வழிகாட்டுகின்றனர். மடடுமல்லாமல் நாம் கம்பளை முஸ்லிம்கள் இந்நாடு மற்றும் எமதூரான கம்பளையைக் கட்டியெழுப்புகின்ற பணிகளுக்கு முழு ஒத்தழைப்புகளையும் தருவதாகவும் கூறினார்.

மஸ்ஜித் நிருவாகிகள் குறிப்பிட்ட ஒருசில பணிகளோடு தமது பணிகளை போதுமாக்கிக் கொள்ளும் இக்காலப் பொழுதில், இந்நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் கம்பளை இலங்கவத்தை மஸ்ஜித் நிருவாகிகளுக்கு அல்லாஹ் றஹ்மத் செய்வானாக!

- தகவல்:

Ash-Sheikh T. Haidar Ali  Al-Haleemi
Colombo 10,  Sri Lanka

சகோதர இன மக்களுடன் ஒரு நோன்புப் பெருநாள் நிகழ்வு... கம்பளை இலங்கவத்த மக்களின் அழகான முன் மாதிரி. g சகோதர இன மக்களுடன் ஒரு நோன்புப் பெருநாள் நிகழ்வு... கம்பளை இலங்கவத்த மக்களின் அழகான முன் மாதிரி. g Reviewed by Madawala News on 7/12/2016 09:26:00 AM Rating: 5