சன நெருக்கடியில் சிக்கிய மகிந்த .. பெயின்ட் கடையில் வைத்து காப்பற்றினார்கள். g



ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய பாத யாத்திரையில் நேற்று கலந்து கொள்ள வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்கள் நெருக்கடியில் சிக்கி அசெளகரியத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ நேற்று பாதயாத்திரையின் இடையில் சென்றவர்களோடு வந்து இணைந்துள்ளார். இணைந்து பாதயாத்திரையின் முன் பகுதி நோக்கி சென்றுள்ளார்.

இவரை கண்ணுற்ற  முன்னாள் இருந்தவர்களும், பின்னாடி இருந்தவர்களும் கையை பிடிப்பதற்கு முண்டியடித்து சூழ்ந்ததால் பாதுகாப்பு பிரிவினராலே கட்டுப்படுத்த முடியாத சன நெருக்கடியில் சிக்கி உள்ளார்.

உடனடியாக களத்தில் இறங்கிய மதுமாதவ போன்றவர்கள் மகிந்தவை குறுக்கால் அழைத்து சென்று பக்கத்தில் உள்ள பெயின்ட் கடைக்குள் உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சன நெருக்கடியில் சிக்கிய மகிந்த .. பெயின்ட் கடையில் வைத்து காப்பற்றினார்கள். g சன நெருக்கடியில் சிக்கிய மகிந்த .. பெயின்ட் கடையில் வைத்து காப்பற்றினார்கள். g Reviewed by Madawala News on 7/29/2016 10:19:00 AM Rating: 5