Ad Space avaiable

(படங்கள் இணைப்பு) வீடுகள் காடுகளாகி சேதமாக்கப்பட்டு அழிந்து நாசமடைந்து விட்டது.. hஅஷ்ரப் ஏ சமத்  -  நேரடி  ரிப்போட் -

கடந்த 2004 டிசம்பா் 26ஆம் திகதி இடம் பெற்ற சுனாமி அணா்த்தின்போது  இலங்கையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டதொரு  பிரதேசம் அம்பாறை  மாவட்டத்தின் கரையோரங்கள். இலங்கையில்   சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை மவாட்டத்தில்  பொத்துவில் தொட்டு நீலாவனை வரையிலான பிரதேசங்களாகும். . இதில் 38, 600 குடும்பங்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வீடுகளை  இழந்து நடுவீதியில் அன்று நின்றனா்.. சுனாமி பேரலையில் அகப்பட்டு சுமாா். 8,600 உயிா்கள்  இழக்கப்பட்டன.  அதில் குடும்பத் தலைவா்  கணவா்,மனைவி பிள்ளைகள் சொந்தங்களை இழந்து இன்றும் சொல்லொன்னாத் துயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனா்.  கடற்கரையோரத்தில் 200 மீட்டா் கடலோர எல்லை பாதுகாப்பு அமுல்படுத்தியதால்  , 27 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வீடுகளை இழந்து அகதி முகாம்களிலும் தமது செந்தங்கள் அல்லது  இடம் பெயா்ந்தும் அப்போது  27 ஆயிரம் குடும்பங்கள் இருந்தனா்.   இன்றும் அவா்களது சுனாமி சோகக் கதைகளை சொல்லி  கண்னீா் வடித்த வன்அனம்த்து உள்ளனா்.   இம் மாடவட்டத்தில் சுனாமியினால்    25 பாடசாலைகள், 7 வைத்தியசாலைகள், 50 மதவழிபாட்டுத்தளங்கள், 50 அரச நிலையங்கள், அத்துடன்  100 பில்லியன் ருபா பெறுமதியான தணியாா்  சொத்துக்களையும் இழந்து இரவோடு இரவாக ஏழைகளாக்கப்பட்டனா்.

இவற்றில் சுனாமி மீள் நிர்மாணப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வைத்தியசாலைகள்  பாடசாலைகள், அரச நிறுவனஙகள்  சர்வதேச  நன்கொடையாளா்களினால் நிர்மாணிக்கப்பட்டு மீள கட்டியெழுப்பப்பட்டன.  .  அதில் வீடமைப்புத் திட்டங்களில்   18 ஆயிரம் வீடுகள்  மட்டுமே நிர்மாணிக்கப்பட்டன. மேலும் 10ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளது.   கடந்த 12 வருட காலத்தில பாதிக்கப்பட்ட குடும்பங்கள் திருமணங்கள் நடைபெற்று குடும்பங்கள் இரட்டிப்படைந்துள்ளனா். இம் ்மக்கள் மீள எழுந்து தமது வாழ்க்கையை  பழைய நிலைக்கு கொண்டுவந்தாலும் சுனாமி வீடுகள் மீள் நிர்மாணப்பணிக்காக கல்முனை, தொட்டு அக்கரைப்பற்று பிரதேசங்களில் சனத்தொகை நெரிசலாக வாழ்வதனால்  அவா்களுக்கான வீடமைப்பு பிரச்சினையில்   மீள் வீடுகள் நிர்மாணப்பணிகள் முற்று முழுதாக முற்றுப் பெறவில்லை.

அந்த வகையில் தான்  2005 ஜனவரியில் சவுதி மண்னா் அரச பிரநிதிகளாக உம்ரா கடமைகளுக்காக முஸ்லீம் தலைவா்களை அழைத்து உம்ரா நிறைவேற்றி விருந்து அளிப்பது வழமையாக இருந்து வருகின்றது. இலங்கைப் பிரநிதியாக அப்போது அம்பாறை மாவட்ட சுனாமி புனா் நிர்மாணத்திற்காக பொறுப்பாகவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஸ்ரப்  சவுதி சென்றிருந்தாா்.  அவருடன் அவரது மகன்  அமான் அஸ்ரபும் சென்றிருந்தாா். அச்சா்ந்தப்பத்தை பயண்படுத்தி தனது கையில் இருந்து வீடியோ கிளிப்பை காண்பித்து அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட திட்டத்தினை மண்னரின் சகோதரா் அமைச்சரும் சவுதி சரட்டபிள் தர்ம நிதியின் தலைவராக செயற்பட்ட அரச நைப்பிடம் காண்பிக்கப்பட்டபோது. உடன் இந்நோசியா நாட்டுக்கு  மும்மொழிந்த 2000 மில்லியன் பெறுமதியான ”சுனாமி ஹிங் ஹூசைன் வீடமைப்புத்திட்டத்தினை” இலங்கைக்கு வழங்குமாறும். அமைச்சா் பேரியல் அஸ்ரபுடன் கலந்து ஆலோசித்து இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமுல்படுத்தும் படி தனது அதிகாரிகளுக்கு நைப்   கட்டளையிட்டு இருந்தாா்.

இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக சவுதி அரச பிரநிதிகள் ஒரே இடத்தில் 100 ஏக்கா் அரச காணிகள் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அரச காணிகள் அரவே  பொத்துவில் தொட்டு மருதமுனை வரையிலான கரையோர  பிரதேசத்தில்  காணிகள்அற்று காணப்பட்டது. காணிஇன்மையால் மீண்டும் இத்திட்டம் மீள இந்தோணியாவுக்கே செல்ல இருந்தது.  ஆனால் அதிா்ஸ்வசமாக  நுரைச்சோலை என்ற பிரசேதத்தில் முன்னாள் அமைச்சா் தயாரத்தனா  ஜே.ஆர் ஜெயவா்த்தன  காலத்தில் முஸ்லீ்ம்களது பரம்பரை  விவசாய  கரும்பு செய்கை பண்னும்  காணிகள்  ஹி்ங்குரானை சீனித்தொழிற்சாலைக்காக சுவீகரிக்கப்பட்டது.  . அக் காணியில் 50 ஏக்கா்  மட்டுமே  அரச காணியாக எஞ்சியிருந்தது, அதனை அப்போதைய அரசாங்க அதிபா் சுனில் கண்னங்கரா அமைச்சா் அஸ்ரப்  மற்றும் போியல் அஸ்ரப் அவா்களது அமைச்சிக்களில் பணிப்பாளராக பதவி வகித்தவா் அவரைக் கொண்டு இக் காணியை  அமைச்சா் பேரியல் பெற்று  சவுதி வீடமைப்புத்திட்டத்தினை நிர்மாணித்தாா்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ச ஆசிர்வாதமும் வழங்கினாா். அதன் பின் இத்திட்டம் நிர்மாணப்பணிகள் நடைபெறும் காலத்தில் பல்வேறு சவால்களை முகம் கொடுக்கப்பட்டது.  சிகல உருமைக் கட்சியினால் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா  இத் திட்டத்தினை மூன்று இனத்திற்கும் அவரவா்களது இன விகிதசாரத்திற்கேற்ப  சுனாமியினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு பகிா்ந்தளிக்கும் படி  தீர்ப்பு வழங்கினாா்.  தீா்ப்பு வழங்கியும் 8 வருடங்கள்  ஆகிவிட்டன. இதுவரை இவ் வீடமைப்புத் திட்டம் எந்த இனங்களாவது சென்று குடியேறி பிரயோசனமடையவில்லை.


அராபியாகள் தமது வருமாணத்தில் சக்காத் நிதியினைக் கொண்டுதான் சவுதி சரட்டபிள் நிதியம் ஏற்படுத்தி இயற்கை  அணா்த்தம், கல்வி, நீா் வீட்டு போன்ற திட்டங்களுக்கு உலக நாடுகளில்  சென்று திட்டங்களை வகுக்கின்றனா்.  அவா்களது ஹலாலான நிதி முஸ்லீம்களை சென்றடைந்து அதனால் அவா்களுக்கு நன்மை  கிடைக்கும் எனத்தான் நம்பி இருக்கின்றனா்.

கடந்த மஹிந்த ராஜபக்ச காலத்தில் இதனை சவுதி அரசாங்கம் நேரடியாகச் சென்று இத்திட்டத்தினை பகிா்ந்தளிக்க முன் வந்தபோதும். அவா் அதன் வரைபடத்தினை அலரி மாளிகைக்குள்  வைத்து திறந்து விட்டு சவுதி அரேபியா பிரநிதிகள் இடமிருந்து திட்டத்தினை கையேற்ற செய்திகள் படங்கள் சவுதி அரப் பத்திரிகையில் காணக்கிடைத்தது.   கடந்த 12 வருடமாகியும் இத்திட்டம் பாதிக்க்பபட்ட முஸ்லீம்களுக்கு வழங்க முடியாமல் அந்த அழகான கட்டிடங்கள். 500 வீடுகள், ஒரு வீடு 3 5  இலட்சம் பெறுமதி வாய்ந்தது. ஒரு வீட்டில் 2 குடும்பங்கள் வாழக் கூடிய நிலையில் அழகாக  நிர்மாிணிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை, சந்தை, சனசமுகநிலையம், விளையாட்டு மைதாணம், பள்ளிவாசல், பாதை, மிண்சாரம்,  ஓய்வரைகள் என ஆசியாவிலே இவ்வாறானாதொறு வீடமைப்புத் திட்டம் எங்கும் நிர்மாணிக்கப்படவில்லை,  வயல், இயற்கை, திட்டத்தினை வளைத்து நீர் ஆரோடை எழில் கொஞ்சும் இயற்கையாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.

வீடுகள் சிறுகச் சிறுக காடுகள் வழந்து, கட்டிடங்களது கூரை ஓடுகள், யண்னல் நிலைகள் கழற்றப்பட்டு கவணிப்பாறற்று நிலையில் உள்ளது.

இத் திட்டத்தினை எந்த சமுகத்திற்காவது மணிதபிமான முறையில் பகிா்ந்தளித்து இதனை வீடில்லாத சகல சமுகங்களுக்கும் நன்மை கிடைக்கக் கூடியவகையில் கையளிக்க அரசியல் தலைவா்கள், ஜனாதிபதி  பிரதமா், வீடமைப்பு அமைச்சா், நீதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க அதிபா்கள் அம்பாறை மாவட்ட அரச பிரநிதிகள் கரிசனை காட்டி இதனை உரிய மக்களுக்கு பகிா்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த நல்மனதுடன் இத்திட்டத்தினை வழங்கிய சவுதி அரசு, மண்னா்கள், முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப், அவரது அமைச்சின் கீழ் இத்திட்டத்திற்காக அப்போது பாடுபட்ட அதிகாரிகளது கனவு நனவாக வேண்டும். அவா்களுக்கு நன்மை போய்ச் சேரல் வேண்டும்.


(படங்கள் இணைப்பு) வீடுகள் காடுகளாகி சேதமாக்கப்பட்டு அழிந்து நாசமடைந்து விட்டது.. h (படங்கள் இணைப்பு) வீடுகள் காடுகளாகி சேதமாக்கப்பட்டு அழிந்து நாசமடைந்து விட்டது.. h Reviewed by Madawala News on 7/13/2016 02:25:00 PM Rating: 5